பாரம்பரியக் காலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செந்நெறிக் காலம் அல்லது பாரம்பரியக் காலம் (Classical antiquity or classical era, classical period or classical age) என்பது கிமு 800 முதல் கிபி 600 வரையிலான பண்பாட்டு வரலாற்றுக் காலம் ஆகும். இக்காலத்தில் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பண்டைய கிரேக்கம்[1], பண்டைய எகிப்து, பண்டைய அண்மை கிழக்கு, பாரசீகம் மற்றும் பரத கண்டப் பிரதேசங்களில் அரசியல், சட்டம், கலை, நுண்கலைகள், இலக்கியம், சமயம், கல்வி, தத்துவம், போர்க்கலை மற்றும் கட்டிடக்கலைகள் செழிப்புடன் வளர்ந்தது.
செந்நெறிக் காலத்தில் கிமு எட்டாம்-ஏழாம் நூற்றாண்டுகளில் பண்டைய கிரேக்க கவிஞர் ஓமர் எழுதிய இலியட் மற்றும் ஒடிசி இலக்கிய நயம் மிகுந்த இதிகாசக் காப்பியங்கள் தோன்றியது. செந்நெறிக் காலத்தின் துவக்கத்தில் கிமு நான்காம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் செழித்தோங்கியது. செந்நெறிக் காலத்தின் கிபி நான்காம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு ஆட்சியில் கிறித்தவ சமயம் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் செழித்தோங்கியது. தமிழ்நாட்டில் சங்க காலத்திய இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் படைக்கப்பட்டது. குப்தப் பேரரசின் காலத்தில் சமஸ்கிருத மொழியில் இதிகாச, புராண இலக்கியங்கள் இயற்றப்பட்டது. வான சாத்திரம், மருத்துவம் வளர்ந்தது.
Remove ads
செந்நெறிக் காலப் பேரரசுகள்
செந்நெறிக் காலத்தில் சிறந்து விளங்கிய பேரரசுகளில் சில:
- மெசொப்பொத்தேமியாவின் புது அசிரியப் பேரரசு (கிமு 911 – கிமு 609) மற்றும் புது பாபிலோனியப் பேரரசு (கிமு 626 – கிமு 539)
- பாரசீகத்தீன் அகாமனிசியப் பேரரசு (கிமு 550 – கிமு 330), பார்த்தியப் பேரரசு (கிமு 247 – கிபி 224) மற்றும் சாசானியப் பேரரசு (கிபி 224 – கிபி 651)
- கிரேக்கத்தின் ஹெலனிய காலப் பேரரசுகள் (கிமு 323 – கிபி 31)
- இந்தியத் துணைகண்டத்தின் மௌரியப் பேரரசு (கிமு 322 – கிமு 185), சாதவாகனப் பேரரசு (கிமு 1-ஆம் நூற்றாண்டு – கிபி 2-ஆம் நூற்றாண்டு), மற்றும் குப்தப் பேரரசு (கிபி 240 – 550)
- நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா பேரரசு (கிமு 256 – கிமு 125)
- உரோமைப் பேரரசு (கிமு 27 – கிபி 476 & கிபி 330 – 1453) முக்கியமானதாகும்.
Remove ads
பாரம்பரியக் காலக் கட்டிடங்கள், தொல்பொருட்கள்
- லம்மசு சிற்பம் (கிமு 721–705), புது அசிரியப் பேரரசு
- சாசானிய அரச குலப் பெண்னின் உருவம் பதித்த கிண்ணம், (கிமு 3-4-ஆம் நாற்றாண்டு)
- அஜந்தா ஓவியங்கள்
பாரம்பரியக் காலத்திய பேரரசுகளின் வரைபடங்கள்
- மெசொப்பொத்தேமியாவின் புது பாபிலோனியப் பேரரசு, கிமு 626 – கிமு 539
- பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு, கிமு 550 – கிமு 330
- ஹெலனிய காலத்திய கிரேக்கப் பேரரசுகள்
- ரோமக் குடியரசு, மற்றும் ரோமப் பேரரசின் நிலப்பரப்புகள்: கிமு 218 (கரும் சிவப்பு), கிமு 133 (இளம் சிவப்பு), கிமு 44 (செம்மஞ்சள்), கிபி 14 (மஞ்சள்), கிபி 14 இன் பின்னர் (பச்சை), கிபி 117 (இளம் பச்சை)
- மௌரியப் பேரரசு, கிமு 322 – கிமு 185
- குப்தப் பேரரசு, கி பி 320 – 550
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads