பத்துமலை கொமுட்டர் நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பத்துமலை கொமுட்டர் நிலையம்map
Remove ads

பத்துமலை கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batu Caves Komuter Station; மலாய்: Stesen Komuter Batu Caves) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தின் (Gombak District) புறநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் நிலையமாகும். இந்த நிலையம் புலாவ் செபாங் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது.[1]

விரைவான உண்மைகள் பத்துமலை, பொது தகவல்கள் ...

முன்பு பத்துமலை தொடருந்து நிலையம் (Batu Caves Railway Station) என்று அழைக்கப்பட்டது. மறுவடிவமைப்புக்குப் பிறகு, ஆகத்து 2010-இல் இந்த நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. 2010 டிசம்பர் 2015 வரை கிள்ளான் துறைமுக வழித்தடற்கான (Port Klang Route) வடக்கு முனையமாக இருந்தது. அதன் பின்னர் சிரம்பான் வழித்தடற்கான (Seremban Line) முனையமாக மாற்றப்பட்டது.[1]

Remove ads

பொது

பத்துமலை தொடருந்து நிலையம் 1 நவம்பர் 1905-இல் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக, புறக்கணிப்பு மற்றும் பயன்பாடு இல்லாததால் இந்த நிலையம் மோசமான நிலைக்கு உள்ளானது. ஆறாவது மலேசியத் திட்டத்தின் (1990-1995) (Sixth Malaysia Plan) கீழ் கோலாலம்பூருக்கும் செந்தூலுக்கும் இடையிலான தொடருந்து இரட்டைப் பாதை மற்றும் மின்மயமாக்கலில் செந்தூல் - பத்துமலை வழித்தடம் சேர்க்கப்படவில்லை.[2][3]

அதன்பிறகு, பத்துமலை தொடருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு, அங்குள்ள தொடருந்து பாதை மின்மயமாக்கப்பட்டது. செந்தூல் - பத்துமலை வழித்தடத்தின் ஒற்றைப் பாதை இரட்டைப் பாதையாக மாற்றப்பட்டது. மேலும்  KC04  தாமான் வாயூ,  KC03  கம்போங் பத்து மற்றும்  KC02  பத்து கென்டன்மன் உள்ளிட்ட புதிய நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள் கட்டப்பட்டன.

Remove ads

பத்துமலை

பத்துமலை (Batu Caves), மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் அமைந்துள்ள இடம் ஆகும். பொதுவாகவே பத்துமலை என்றால் பத்துமலை கோயிலைக் குறிப்பிடுவதாக அமையும். சுண்ணாம்பு குன்றுகளில், அமைந்துள்ள இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. [4]

இந்தக் குகைக் கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (Batu River) பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.[5]

பத்துமலை கோயில்

கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே .தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891-ஆம் ஆண்டு இந்தப் பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது. 1860 ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் காய்கறி பயிரிட்டு வந்தனர்.

அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் பத்துமலைக் குகைகளிலிருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன்னர் இந்தக் குகைகளில் தெமுவான் எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.[6] இவர்களும் பத்துமலையைத் தங்களின் புனிதத் தலமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.[7]

Remove ads

மேற்சான்றுகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads