பத்ராச்சல இராமதாசு

கவிஞர் மற்றும் பாடலாசிரியர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காஞ்செர்லா கோபண்ணா (1620 - 1680) அல்லது பக்த இராமதாசு அல்லது பத்ராச்சல இராமதாசு என்று பிரபலமாக அறியப்படும் இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராம பக்தர். மேலும் இவர் கர்நாடக சங்கீதமும் தெரிந்தவரார். [1] இவர் தெலுங்கு பாரம்பரிய சகாப்தத்தைச் சேர்ந்த பிரபலமான வாக்யாயகரர் (பாரம்பரிய இசையமைப்பாளர்) ஆவார். இவரது சமகாலத்தவர்களில் தெலுங்கு இலக்கியத்தின் தூண்களான அன்னமாச்சாரியார், தியாகராஜர், சேத்ரய்யா, மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் அடங்குவர். 16 ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் ஆளும் தெலுங்கு நாட்டில் பத்ராச்சலம் நகருக்கு அருகிலுள்ள நெலகொண்டபள்ளி கிராமத்தில் வசித்து வந்த இவர், சிறீ இராமருக்காக புகழ்பெற்ற கோவிலை பத்ராச்சலத்தில் கட்டி புகழ் பெற்றார். இராமருக்கான இவரது பக்திப் பாடல்கள் தென்னிந்திய பாரம்பரிய இசையில் இராமதாசு கீர்த்தனலு என பிரபலமாக உள்ளன. தென்னிந்திய பாரம்பரிய இசையின் முக்கிய நபரான தியாகராஜர் கூட இவரது இசை அமைப்புகளைக் கற்றுக்கொண்டார். இவர் தாசரதி சடகாமு, 'மகுடமு' '' தாசரதி கருணா பயோனிதி" போன்ற பாடல்களை இராமர் மேல் கிட்டத்தட்ட 108 கவிதைகளின் தொகுப்பையும் எழுதியுள்ளார்.

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

பக்த ராமதாசு என அழைக்கப்படும் மாபெரும் மேதையான காஞ்செர்லா கோபண்ணா (கோபராசு) ஒரு வசதியான தெலுங்கு நியோகி பிராமணக் குடும்பத்தில் லிங்கண்ணா மந்திரி மற்றும் காமாம்பா ஆகியோருக்கு கம்மம் வட்டம் நெலகொண்டபள்ளி கிராமத்தில் (முந்தைய வடக்கு தெலங்காணா மாநிலத்தின் வாரங்கல் பிரிவு) பிறந்தார். கோல்கொண்டாவில் உள்ள குதுப் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த தானா ஷா அரசவையில் அமைச்சர்களாக இருந்த மாதண்ணாவும் அக்கண்ணாவும் இவரது மாமன்கள். கோபண்ணா பின்னர் பல்வஞ்சா வட்டத்தின் வட்டாச்சியராக தானா ஷாவால் பணியமர்த்தப்பட்டார்.

Remove ads

தொழில்

குதுப் ஷாஹி சுல்தான் அபுல் ஹசன் தானா ஷா அரசவையில் இவரது மாமா மற்றும் நிர்வாகத் தலைவரான அக்கண்ணா என்பவரால் இராமதாசு 'பால்வோஞ்ச பரகனா'வின் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் தனது பணியின் கடமைகளை மிகுந்த ஆர்வத்துடன் நிறைவேற்றினார். சுல்தானுக்கு வருவாயைச் சேகரித்தார். அதே நேரத்தில் இராமர் பெயரைக் பாடுவதின் மூலமும் ஏழைகளுக்கு உணவளிப்பதன் மூலமும் தனது சேவையைத் தொடர்ந்தார்.

கோயில் பணி

Thumb
தெலங்கானாவில் உள்ள பத்ராச்சலம் கோயிலில் சிறீ இராம நவமி கல்யாணம் உற்சவம்

ஒருமுறை இவர் ஒரு நிகழ்ச்சிக்காக பத்ராச்சலம் சென்றதாகவும், அங்குள்ள கோயிலின் பாழடைந்த நிலையால் கலக்கம் அடைந்ததாகவும் தொன்மக் கதைகள் தெரிவிக்கின்றன. பல காரணங்களுக்காக இராம பக்தர்களுக்கு பத்ராச்சலம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இராமர் தன் வசவாச காலத்தில் சீதா மற்றும் லட்சுமணனுடன் பர்னாசாலை அருகே தங்கியிருந்ததாகவும், பத்ராச்சலம் அருகே சபரியை சந்தித்தாகவும் கூறப்படுகிறது (இராமாயணத்திலுள்ள வானர இராச்சியமான கிட்கிந்தைக்கு அருகே சபரி வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. (அம்பிக்கு அருகில்). இங்குள்ள பாகவத புராணத்தை தெலுங்கிற்கு மொழிபெயர்க்க போத்தனாவுக்கு இராமர் வழிநடத்தியதாக நம்பப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் இருந்தபோதிலும், கோயில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. எனவே, கோயிலை செப்பனிட்டு புனரமைப்பதற்காக இரமதாசு நிதி திரட்டத் தொடங்கினார். இவர் தனது பொக்கிஷங்களை காலி செய்ததோடு, மேலும் பணம் திரட்ட முடியாமலும் இருந்ததால், கிராம மக்கள் வருவாய் வசூலை புனரமைப்புக்காக செலவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். மேலும் பயிர்களை அறுவடை செய்தபின் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்தனர். இதுபோன்று, அபுல் ஹசன் குதுப் ஷாவின் அனுமதியின்றி - நில வருவாயிலிருந்து வசூலிக்கப்பட்ட ஆறாயிரம் ரூபாயுடன் கோயிலின் புனரமைப்பை இராமதாசு முடித்தார்.

கோயில் கட்டி முடிக்கும் வேளையில், பிரதான கோயிலின் முகப்பில் சுதர்சன சக்கரத்தை பதிப்பது குறித்து ஒரு நாள் இரவு இவர் குழப்பமடைந்தார். அதே இரவில், இவரது கனவில் இராமரைப் பார்த்ததாகவும், கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சொன்னதாகவும், மறுநாள் கோபண்ணா அவ்வாறு செய்தபோது, சுதர்சன சக்கரம் கிடைத்தது என்று நம்பப்படுகிறது.

அரசு பணத்தைக் கையாடல் செய்ததற்காக அவரது மேலதிகாரிகள் கோபண்ணாவைச் சிறையிலிட்டார். அன்று இரவே இராமர் அவரிடம் கோபண்ணா உருவில் சென்று பணம் முழுவதையும் செலுத்தி, அவருக்கு பொற்பாத தரிசனமளித்தார். மேலும் பணம் செலுத்தியதற்கான இரசீதை சிறையிலுறங்கிக்கொண்டிருந்த கோபண்ணாவின் தலைமாட்டில் வைத்துவிட்டு மறைந்தார். மறுநாள் காலையில் அதிகாரி இவரிடம் நேரில் வந்து பொற்பாதத்தின் இரகசியத்தை வினவ கோபண்ணா அவரை மலைக்கழைத்துச் சென்றார். தன் சன்னிதானத்திற்கு வந்த முமதியனுக்கு இராமர் தரிசனம் கொடுத்தார்.[2] என்ற கதை நிலவுகிறது.

Remove ads

கர்நாடக பாடல்கள்

இராமதாசு கிட்டத்தட்ட 300 பாடல்களை இயற்றியுள்ளார். [3]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads