பர்யாப் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஃபர்யாப் (Faryab (Persian: فاریاب) என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்று. இந்த மாகாணமானது நாட்டின் வடபகுதியில் துருக்மெனிஸ்தான் எல்லையில் உள்ளது. மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையானது 948,000 ஆகும். இந்த மாகாணமானது பல இன மக்களைக் கொண்டதாக குறிப்பாக பெரும்பாலும் பழங்குடி சமூகத்தைக் கொண்டது. மாகாணத்தில் 15 மாவட்டங்களும் 1,000 கிராமங்களும் உள்ளன. ஃபயாப் மாகாணத்தின் தலைநகரம் மேமனா ஆகும்.
Remove ads
வரலாறு

ஃபாரியப் என்பது ஒரு பாரசீக இடப்பெயராகும். இதன் பொருள் ""ஆற்றின் நீரை திசை திருப்பி பாசனம் செய்யப்படும் நிலங்கள்""[3] என்பதாகும். இது சாசானியால் நிறுவப்பட்ட ஒரு நகரத்தின் பெயரைக் கொண்டு இடப்பட்டது, பின்னர் இந்நகரம் 1220 ல் படையெடுத்த மங்கோலியர்களால் அழிக்கப்பட்டது. இது புகழ்பெற்ற இஸ்லாமிய மெய்யியலாளர் அல் ஃபராபி மற்றும் வரலாற்று ஆசிரியரான இபின் அல்-நடிம் ஆகியோர் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். இப்பகுதியானது வரலாற்றுச் சிறப்புடைய குராசான் பகுதியைச் சேர்ந்தது. பிரித்தானிய புவியியலாளர்கள் இந்த பகுதியை ஆப்கானிஸ்தான் துர்க்கிஸ்தான் என குறிப்பிட்டுள்ளனர்.
ஃபாரியப்பின் குடியேற்ற வரலாற்றானது பழமையானதாகவும் பல கட்டங்களைக் கொண்டதாகவும் உள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் வந்து கி.மு. 586 இல் குடியேறினர். இந்தப் பகுதி பாரசீக கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, பின்னர் கி.மு. 326 ல் அலெக்சாந்தரின் வெற்றிக்குப் பின்னர் கிரேக்க ஆட்சியின்கீழ் வந்தது.பாரசீக ஆதிக்கமானது 3 ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை மீட்கப்பட்டது.[4]
இசுலாமிய காலகட்டத்துக்கு முந்தைய கால கட்டமானது அரபு இஸ்லாமியர்களால் வட ஆப்கானித்தான் வெற்றி கொள்ளப்பட்டதுடன் (651-661 AD) முடிவடைகிறது. இந்தப் பகுதி "இரு பெரும் கலாச்சாரங்களான அரபு மற்றும் பாரசீக கலாச்சாரங்கள் தங்கள் அரசியல் மற்றும் புவியியல் மேலாதிக்கத்துக்கு மட்டுமல்லாமல், தத்துவார்த்த மேலாதிக்கத்திற்காகவும் போராடியதால் பிராந்தியமானது பரந்த போர்க்களமாக மாறியது."[5] இதன் விளைவாக, பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் நிலவிவந்த சொராட்டிரிய நெறி, பௌத்த சமயம், நெஸ்டோரியக் கிறித்துவம் மற்றும் பழங்கால பேகன் பழங்குடி வழிபாடு ஆகியவை அகற்றப்பட்டன. பல்வேறு இஸ்லாமிய வம்சங்கள் அதிகாரத்திற்கு உயர்ந்தன இது உள்ளூர் மக்களை பாதித்தது. அவை சஃபாரிட்ஸ், சாமனிட்ஸ், காஸ்நவிட்ஸ், செல்யூக் மற்றும் குரிட்ஸ் ஆகியவை ஆகும்.
11 ஆம் நூற்றாண்டில் ஃபயப் வரலாறு செங்கிஸ்கானின் மங்கோலியப் படையெடுப்பினால் மீண்டும் மாறியது. அவர் வட பகுதியில் இருந்து நகர்ந்து வந்தபோது, மேமனா உட்பட்ட நகரங்கள் அழிக்கப்பட்டன, மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், தானியங்கள், வயல்கள், கால்நடைகள் போன்றவை கொள்ளையிடப்பட்டன அல்லது தீக்கிரையாயின. மேலும் பழங்கால நீர்ப்பாசன அமைப்புகள் அழிக்கப்பட்டன. செங்கிஸ் கானின் வம்சாவளிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆமூ தாரியா ஆற்றின் வடக்கே புகாரா அல்லது சமர்கண்ட் ஆகியவற்றை மாற்றுத் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சி உருவானது. அவர்கள் மேலதிகாரிகளிடம் மியன்மாவிலும் மற்ற இடங்களிலும் உள்ளூர் பழங்குடித் தலைவர்களின் சுயாட்சிக்கு அனுமதித்தனர். இந்த மரபுகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தன.
Remove ads
அரசியல் மற்றும் ஆட்சி

இந்த மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அப்துல் ஹக் ஷபாக்கின் 2007 ஆம் ஆண்டு முதல் இருந்துவந்தார். இவருக்கு பின் ஆமிர் லத்தீஃப் இருந்துவருகிறார்.
இந்த மாகாணத்தின் தலையகரம் மயமான நகரம் ஆகும். மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளையும் ஆப்கானிய தேசிய காவல் துறையால் (ஏஎன்பி) கட்டுப்படுத்தப்படுகின்றது. காபூலின் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக காவல் தலைவர் உள்ளார். ஏஎன்பி போன்றவற்றுக்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
Remove ads
போக்குவரத்து
2014 மே முதல் மயானா விமான நிலையத்திலிருந்து வழக்கமான பயண சேவை வழங்கப்பட்டுவருகிறது.[6]
மாகாணத்தின் சாலை வசதியானது 2006 வரை முழுமையான பாதையமைப்பு இல்லாமல் இருந்தது.[7]
துர்க்மேனிஸ்தானின் அக்கினா மற்றும் இமாம்நஜர் இடையே ஒரு குறுகிய சர்வதேச தொடர்வண்டிப் பாதை இணைப்பு உள்ளது, இது டாம்மீர் இரயில் வலையமைப்பான அட்டமைராட்டை இணைக்கிறது.[8]
பொருளாதாரம்
மாகாணத்தின் பொருளாதாரமானது பெரிய அளவில் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பை ஆதாரமாகக் கொண்டுள்ளது. மேலும் ஃபாரிப் அங்கு உற்பத்தி செய்யப்படும் கம்பளங்களுக்காக புகழ்பெற்றதாக உள்ளது. மேலும் பாரம்பரியமாக பெண்களால் செய்யப்படும் கைவினைப் பொருட்களான கிலிம்களுக்கும் புகழ்பெற்றதாக உள்ளது. இந்த மாகாணத்தில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன, ஆனால் அகழ்வு குறைவாக உள்ளது.
நலவாழ்வு
சுத்தமான குடிநீர் கிடைக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 2005 இல் 23% என்ற நிலையில் இருந்து 2011 இல் 24% ஆக உயர்ந்தது.[9] 2011 இல் நிகழ்ந்த பிரசவங்களில் 16% பயிற்சியுடைய தாதிகளின் உதவியோடு நிகழ்ந்தது. இது 2005 இல் 2% இருந்தது.
கல்வி
ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் (வயது 6+ ) 2011 இல் 18% ஆக உள்ளது.
மக்கள் வகைப்பாடு


மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 948,000, இது பெரும்பாலும் பழங்குடி மற்றும் கிராமப்புற சமுதாய மக்களைக் கொண்டது.[2] மாகாணத்தில் வாழும் முக்கிய இனக்குழுக்கள் உஸ்பெகிகள், தாஜிக், பஷ்டூன், கசாரா மற்றும் பிறர்.[10] உஸ்பெக்ஸ் மற்றும் பஷ்டூன் ஆகியோருக்கு இடையில் அவ்வப்போது இன மோதல்கள் இடம்பெற்றுள்ளன.[11][12]
மாகாணத்தில் முதன்மையாக பேசப்படும் மொழிகள் தார் மற்றும் உஸ்பெக்கி ஆகியவை ஆகும். மாகாணத்தின் அனைத்து மக்களும் இஸ்லாமை பின்பற்றுகின்றனர், சுன்னிகள் பெரும்பான்மையினராக உள்ளனர், ஷியைட்டுகள் (ஷியாக்கள்) சிறுபான்மையினராக உள்ளனர். ஷியாக்கள் முக்கியமாக ஹஜராஸ் இனத்தவராக உள்ளனர்.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads