பாகாநாகா சந்தை தொடருந்து நிலையம்

ஒடிசாவில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாகாநாகா சந்தை தொடருந்து நிலையம் (Bahanaga Bazar railway station) என்பது ஒடிசா மாநிலத்தில் காரக்பூர்-பூரி பாதையில் உள்ள ஒரு ரயில் நிலையம் ஆகும். இது தென்கிழக்கு இரயில்வே மண்டலத்தின் காரக்பூர் இரயில்வே கோட்டத்தின் கீழ் ஹவுரா-சென்னை முதன்மை வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.[1] இது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலேசுவர் மாவட்டத்தில் உள்ள அசிமிலா, பாகாநாகாவில் அமைந்துள்ளது.[2]

விரைவான உண்மைகள் பாகாநாகா சந்தை தொடருந்து நிலையம்Bahanaga Bazar railway station, பொது தகவல்கள் ...

    

மேலதிகத் தகவல்கள் Kharagpur–Puri line ...
Remove ads

வரலாறு

1893 மற்றும் 1896க்கு இடையில் கிழக்கு கடற்கரை மாநில இரயில்வே ஹவுரா-சென்னை முதன்மை வழித்தடத்தினை அமைத்தது. காரக்பூர்-புரி கிளை இறுதியாக 1901-ல்[3] பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. இந்த வழித்தடம் கட்டங்களாக மின் மயமாக்கப்பட்டது. 2005-ல், ஹவுரா-சென்னை பாதை முற்றிலும் மின் மயமாக்கப்பட்டது.[4]

விபத்து

சூன் 2, 2023-ல், இந்த தொடருந்து நிலையம் அருகே தொடருந்துகள் தடம் புரண்டு நடைபெற்ற விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் கொல்லப்பட்டனர். தெற்கு நோக்கிச் செல்லும் கோரமண்டல விரைவுத் தொடருந்து பக்கவாட்டில் தவறாக நிறுத்தப்பட, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது. மேலும் தடம் புரண்ட பெட்டிகள் மீது வடக்கு நோக்கிச் செல்லும் ஹவுரா-எஸ்எம்விடி பெங்களூரு அதிவிரைவு தொடருந்து மோதியது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads