பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள போக்குவரத்து நிலையம். From Wikipedia, the free encyclopedia

பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம்map
Remove ads

பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pandan Jaya LRT Station; மலாய்: Stesen LRT Pandan Jaya; சீனம்: 美和家站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]

விரைவான உண்மைகள் AG14 பாண்டான் ஜெயா, பொது தகவல்கள் ...

இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பாண்டான் ஜெயா எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில் இருந்து இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் பாண்டான் 3/8 சாலை, இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது.

Remove ads

பொது

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.

இந்த நிலையம் பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் கொண்டுள்ளது. இந்த நிலையம் 1 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையத்துடன் பாண்டான் எனும் அதே பெயரைப் பகிர்ந்து கொள்கிறது.[3]

Remove ads

அம்பாங் வழித்தடம்

அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.

இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[4]

Remove ads

காட்சியகம்

பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads