பினாங்கு இந்து அறநிலைய வாரியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பினாங்கு இந்து அறநிலைய வாரியம் (மலாய்: Lembaga Wakaf Hindu Pulau Pinang ; ஆங்கிலம்: Penang Hindu Endowments Board (PHEB); என்பது மலேசியா, பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஒரு வாரியம் ஆகும். இந்த வாரியம் பினாங்கு மாநிலத்தின் இந்து சமய விவகாரங்களை நிர்வகிக்கிறது.[1] இதன் நிர்வாகம் பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.

விரைவான உண்மைகள் மாநில அரசு மேலோட்டம், அமைப்பு ...

பினாங்கு இந்து அறநிலைய வாரியத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கைகள் மலேசிய ஒற்றுமைத் துறை அமைச்சரால் மலேசிய அமைச்சரவையின் வழியாக மலேசிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Remove ads

பொது

தற்போது, பினாங்கு இந்து அறநிலைய வாரியம், அதன் இயக்குநர் ஆர். எஸ். என். ராயர் என்பவரால் வழிநடத்தப்படுகிறது பினாங்கு இந்து அறநிலைய வாரியம் (PHEB) என்பது 1906-ஆம் ஆண்டு இந்து அறநிலையச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.[2]

வரலாறு

பினாங்கு தீவு இந்து அறநிலைய வாரியம்; 1906-இல் இந்து அறநிலையச் சட்டம் 1906-இன் கீழ் நிறுவப்பட்டது. இந்துக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பினாங்கு மாநிலத்தில் பிரித்தானிய மலாயா காலனித்துவவாதிகளால் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பங்கு

பினாங்கில் உள்ள இந்து சமூகத்தின் நலனுக்காக நிலம், கட்டிடங்கள், வீடுகள், கல்லறைகள், கோயில்கள் மற்றும் நிதிகள் போன்ற கொடைகளை நிர்வகிப்பதற்கு இந்த வாரியம் பொறுப்பு வகிக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads