பினாங்கு பிரித்தானிய முடியாட்சி
பிரித்தானிய முடியாட்சி ஆளுமையின் கீழ் பினாங்கு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பினாங்கு பிரித்தானிய முடியாட்சி (ஆங்கிலம்: Crown Colony of Penang; மலாய்: Jajahan Mahkota Pulau Pinang) என்பது 1946-ஆம் ஆண்டில் இருந்து 1957-ஆம் ஆண்டு வரையில் பினாங்கு மாநிலம், பிரித்தானிய முடியாட்சி ஆளுமையின் கீழ் இருந்ததைக் குறிப்பிடுவதாகும். 1786-ஆம் ஆண்டு கெடா சுல்தானகத்தால் விட்டுக் கொடுக்கப்பட்ட பிறகு, பினாங்கு தீவு பிரித்தானிய இறையாண்மையின் கீழ் வந்தது.
பினாங்கு தீவு, 1826-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரையில் நீரிணை குடியேற்றங்களின் ஒரு பகுதியாக இருந்தது.[1] பின்னர் சிங்கப்பூருடன் இணைக்கப்பட்ட இந்த பினாங்கு பிரித்தானிய முடியாட்சி, இலண்டனில் இருந்த பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தின் (Colonial Office) நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முடியாட்சி குடியேற்றப் பகுதியாக (Crown colony) மாறியது. பின்னர் இந்த முடியாட்சி மலாயன் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது.[2]
Remove ads
வரலாறு
1786-ஆம் ஆண்டு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், பினாங்கு தீவைக் கைப்பற்றி அங்கே ஒரு வணிக நிலையத்தை நிறுவியது.[3] சயாமிய மற்றும் பர்மிய அண்டை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக கெடாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கெடா சுல்தானால் பினாங்கு தீவு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[4] பின்னர் அது ஒரு முடியாட்சி குடியேற்றப் பகுதியாக மாற்றப்பட்டது.
1867-ஆம் ஆண்டு நீரிணை குடியேற்றங்கள் எனும் நிர்வாகக் கூட்டமைப்பின் மூலமாக பினாங்கு தீவு; பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.[3] பின்னர் 1942-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை, இரண்டாம் உலகப் போரின் காலக்கட்டத்தில் அந்தத் தீவு சப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
மலாயா கூட்டமைப்பு
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நீரிணை குடியேற்றங்கள் கூட்டு நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டது. பினாங்கு, மலாக்கா இரு குடியேற்றப் பகுதிகளும் மலாயா கூட்டமைப்பில் முடியாட்சி குடியேற்றப் பகுதிகளாக மாற்றம் கண்டன. அதே வேளையில் சிங்கப்பூர் மட்டும் மலாயாவிலிருந்து பிரிந்து தனி ஒரு பிரித்தானிய முடியாட்சி குடியேற்றப் பகுதியாகத் (Standalone Crown Colony) தடம் கண்டது.[5]
1955-ஆம் ஆண்டில், பினாங்கில் பிரித்தானிய ஆட்சி முடிவிற்கு வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த துங்கு அப்துல் ரகுமான் பிரித்தானியர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதுவே பினாங்கு நிர்வாகத்தை மலாயா ஒன்றியத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்பாக அமைந்தது. பின்னர் காலத்தில் மலாயா ஒன்றியம் என்பது மலாயா கூட்டமைப்பு என மாற்றம் கண்டது.
1957 ஆகத்து 31-ஆம் தேதி, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து மலாயா விடுதலை பெற்றபோது, பினாங்குத் தீவு மலாயா கூட்டமைப்பில் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. இந்த மலாயா கூட்டமைப்பு பின்னர் மலேசியா என விரிவாக்கம் கண்டது. பினாங்கு மற்றும் பிரித்தானிய போர்னியோவில் இருந்த சபா, சரவாக், பிரித்தானிய குடியேற்றங்களும் மலேசிய கூட்டமைப்பில் இணைக்கப்பட்டன.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
