பினாங்கு வெறுங்கல்லறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பினாங்கு வெறுங்கல்லறை (மலாய்: Tugu Cenotaph Pulau Pinang; ஆங்கிலம்: Cenotaph Penang) என்பது மலேசியா பினாங்கு, ஜோர்ஜ் டவுன் மாநகரில் உள்ள பினாங்கு எஸ்பிளனேட் கடற்கரை நகரச் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு வெறுங்கல்லறை (Cenotaph) ஆகும்.[1]
இந்த நினைவுச் சின்னத்தின் தளம், தற்போது துன் சையத் சா பராக்பா சாலையில் (Jalan Tun Syed Sheh Barakbah), பினாங்கு எஸ்பிளனேட் அமைந்துள்ள கடற்கரையில் அமைந்துள்ளது.[2]
தற்போதைய கல்லறையானது 1929-இல் கட்டப்பட்ட அசல் கல்லறையின் 1948-ஆம் ஆண்டு புனரமைப்பு ஆகும்.
Remove ads
பொது
1929-ஆம் ஆண்டில், சுவான் & மெக்லாரன் எனும் கட்டிடக்கலை நிறுவனத்தால், இந்தக் கல்லறை வடிவமைக்கப்பட்டு நீரிணை டாலர் $ 12,000 செலவில் கட்டப்பட்டது. அசல் கல்லறையானது முதலாம் உலகப் போரில் பினாங்கில் உயிர் இழந்த நேச நாட்டுப் படைவீரர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் சப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமித்தபோதும்; 1944, 1945-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் நேச நாடுகளின் குண்டுவீச்சுகளின் போதும் (Bombing of South-East Asia (1944–1945); இந்தக் கல்லறை சேதம் அடைந்தது.
புனரமைப்பு
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் நீரிணை டாலர் $ 3, 500 செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் (சயாம் மரண இரயில்பாதையில் பணிபுரிந்த போர்க் கைதிகள் உட்பட), மலாயா அவசரகாலம், அதைத் தொடர்ந்து நடந்த மறு கிளர்ச்சிகள், மற்றும் இந்தோனேசியா - மலேசியா மோதல் ஆகியவற்றில் உயிர் நீத்த போர் வீரர்களுக்காக ஒரு சிறிய வெறுங்கல்லறையும், இந்தக் கலறையில் கட்டப்பட்டு உள்ளது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads