புது காசி விஸ்வநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புது காசி விஸ்வநாதர் கோயில் (New Vishwanath Temple or Birla Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. தொழில் அதிபர்களான பிர்லா குடும்பத்தினர் இக்கோயிலை 1966-ஆம் ஆண்டில் கட்டி காசி விஸ்வநாதருக்கு] அர்ப்பணித்தனர். இக்கோயில் கோபுரம் 250 அடி உயரம் கொண்டது.[1][2][3][4][5][6]
Remove ads
வரலாறு
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை தில்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயில் பொ.ஊ. 1194-ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக் என்ற அடிமை வம்ச மன்னரும், 1447-1458 இடைப்பட்ட காலத்தில் ஜவுன்பூர் சுல்தான் உசைன் ஷா ஷர்க்கியாலும், பிறகு அவுரங்கசீப்பாலும் இடித்துத் தள்ளப்பட்டதுடன், இடித்த இடத்தில் ஞானவாபி பள்ளிவாசல் எழுப்பப்ப்பட்டது.
1931-ஆம் ஆண்டில், இந்திய விடுதலை இயக்க வீரரான பண்டிட் மதன் மோகன் மாளவியா என்பவரால், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் காசி விஸ்வநாதர் கோயில் கட்டிட அமைப்பில் கோயிலை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டது.[1][2][3][4][5][6][7] இக்கோயில் கட்டுவதற்கு பிர்லா குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். இக்கோயிலை கட்ட 35 ஆண்டுகள் ஆனது. 1966-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தின் உயரம் 77 மீட்டர் ஆகும். இது இந்தியாவில் மிகவும் உயரமான கோயில் ஆகும். இக்கோயில் பளிங்குக் கல் மற்றும் மணற்கற்களால் கட்டப்பட்டது.
தரை தளத்தில் இக்கோயில் மூலவரான காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளது. முதல் தளத்திதில் அண்ணபூரணி, நடராசர், துர்கை, அனுமார், இலக்குமி நாராயணன், விநாயகர், நந்தி மற்றும் பைவரர் ஆகிய தெய்வங்களுக்கான சன்னதிகள் உள்ளது. கோயில் உட்புறச் சுவர்களில் பகவத் கீதையின் சுலோகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.[1][2][3][4][5][6]
Remove ads
அமைவிடம்
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தென்மேற்கே 7 கி.மீ. தொலைவிலும், வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
படக்காட்சிகள்
- கோயிலின் கிழக்கு நுழைவாயில்
- கிழக்கு நுழைவாயில்
- நந்தி சிற்பம்
- வேள்வி செய்யுமிடம்
- கோயிலின் வடக்குப் பக்கம்
- கோயில் கோபுர விமானம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads