புரசைவாக்கம் நெடுஞ்சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புரசைவாக்கம் நெடுஞ்சாலை[1] (ஆங்கிலம்: Purasawalkam High Road) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புரசைவாக்கம் புறநகர்ப் பகுதியில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[2] சென்னை மாநகரின் முக்கியமான வியாபார மையங்களில் இச்சாலைப் பகுதியும் ஒன்றாகும். சென்னையின் இரண்டாம் கட்ட மூன்றாவது மெற்றோ வழித்தடம் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.[3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில், 13.085755°N 80.251755°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு புரசைவாக்கம் நெடுஞ்சாலை அமையப் பெற்றுள்ளது.
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, டவுட்டன், கீழ்ப்பாக்கம், கெல்லீஸ், அண்ணா நகர், அயனாவரம், பெரம்பூர், சூளை, புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி, வியாசர்பாடி, கொளத்தூர், வில்லிவாக்கம், அமைந்தக்கரை மற்றும் பாரிமுனை போன்ற முக்கியமான புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் தனிநபர் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இச்சாலை வழியாக அதிகளவில் பயணிக்கின்றன.[4]
இச்சாலையில், முக்கியமான ஜவுளி வியாபார நிறுவனங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள், உணவுக் கூடங்கள், மின்னணு உபகரண கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், திரையரங்க வளாகம், தொலைத்தொடர்பு அரசு அலுவலகம், செல்பேசி சேவை மையங்கள், பூ வியாபாரிகள், பழ விற்பனையாளர்கள் ஆகிய தொழில் சார்ந்தோர் அதிகமாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads