பூர்ணியா மாவட்டம்

பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பூர்ணியா மாவட்டம்
Remove ads

பூர்ணியா மாவட்டம் (Purnia district) பீகாரின் 38 மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகர் பூர்ணியா நகரம் ஆகும். இம்மாவட்டம் கங்கைக் கரையிலிருந்து வடக்கு நோக்கி விரிவடைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் அடங்கிய பகுதி பீகாரின் பூர்ணியா பிரிவின் கீழ் வருகிறது.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

வரலாறு

முகலாயர்களின் காலகட்டத்தில் இது ராணுவ கேந்திரமாக இருந்தது. இதனுடைய வருவாய் முழுவதும் இதன் எல்லையைப் பாதுகாக்கவே பயன்படுத்தப்பட்டது. வடகிழக்குப் பகுதி பழங்குடியினரிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க எப்போதும் இது ராணுவ கேந்திரமாகவே இருந்து வந்துள்ளது[1]. பூர்ணியாவில் நகரத்தில் நடக்கும் துர்கா பூஜை சிறப்பு வாய்ந்தது. பூர்ணியா என்ற பெயரில் மாதா பூரண் தேவி கோவில் ஒன்று இங்கு உள்ளது. அக்கோவிலின் பெயராலே இந்நகருக்கு பூர்ணியா என்ற பெயர் வந்தது.

Remove ads

புவியியல் அமைவிடம்

இம்மாவட்டம் 3,229 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.,[2] இது சாலமன் தீவுகளின் மகிரா தீவின் பரப்பளவிற்கு இணையானதாகும்.[3] இப்பகுதி வழியாக இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் பல ஆறுகள் பாய்ந்தோடுவதால் இங்கு விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. கோஸி, மகாநந்தா, சுவாரா, காளி, பனார் மற்றும் கோலி ஆகிய ஆறுகள் இவ்வழியாகச் செல்கின்றன.

பொருளாதாரம்

இங்கு பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழில். தானியங்கள், கோதுமை, அரிசி, காய்கறிகள் மற்றும் தர்பூசணி ஆகியவை முக்கியப்பயிர்களாகும். 2006 ஆம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் அமைச்சரவை பூர்ணியா மிகவும் பிற்படுத்தப்பட்ட 250 மாவட்டங்களில் ஒன்று என வகைப்படுத்தி நிதி உதவி அளித்தது.[4]

பிரிவுகள்

பூர்ணியா மாவட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

  • பூர்ணியா
  • பான்மான்கி
  • பைஸி
  • தாம்தாஹா

இவை மேலும் 14 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  • கிழக்குப் பூர்ணியா
  • கிரிட்யாநாடு நகர்
  • பான்மான்கி
  • காஸ்வா
  • அமவ்ர்
  • பாய்ன்ஸி
  • பாய்ஸா
  • தாம்தாஹா
  • பார்ஹாயா கோதி
  • ரூபாவ்லி
  • ப்ஹாவானிபூர்
  • டாஹார்வா
  • ஜலால்ஹார்
  • ஶ்ரீநகர் ஆகும்.

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தில் 36,73,127 பேர் வசிக்கின்றனர்.[5] மக்கள் அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டருக்கு 1,014 பேர் ஆகும்.[5] மக்கட்தொகை பெருக்க விகிதம் 28.66 % ஆகும்.[5] ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள்.[5] இவ்விட மக்களின் கல்வியறிவு 64.49 % ஆகும்.[5] இது இந்திய நாட்டின் கல்வியறிவை விட அதிகமாகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads