பெக்கோக் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பெக்கோக் தொடருந்து நிலையம்map
Remove ads

பெக்கோக் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bekok Railway Station; மலாய்: Stesen KTMB Bekok) என்பது மலேசியா, ஜொகூர், சிகாமட் மாவட்டம், பெக்கோக் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பெக்கோக் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால், பெக்கோ நகரத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது.

விரைவான உண்மைகள் பெக்கோக், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் பெக்கோக் நகரத்திற்கும்; மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.[1]

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. பெக்கோக் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், பெக்கோக் நகரத்தின் பெயரில் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது.

Remove ads

பொது

கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பெக்கோக் நிலையம் கட்டப்படுகிறது. இந்த நிலையம் 23 ஜூன் 2021 அன்று மூடப்பட்டு, அதற்குப் பதிலாக பெக்கோக் நகரத்தில் ஒரு தற்காலிக நிலையம் அமைக்கப்பட்டது.

மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[2]

புதிய பெக்கோக் நிலையம் திறக்கப்பட்டதும், பழைய நிலையம் இடிக்கப்படும் என்று மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) அறிவித்துள்ளது.

Remove ads

மேற்சான்றுகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads