பெக்கோக்
மலேசியா, ஜொகூரில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெக்கோக் (மலாய்: Bekok; ஆங்கிலம்: Bekok; சீனம்: 彼咯) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும். இந்த நகரம் சிகாமட் நகரத்திற்கு தென் கிழக்கே 54 கி.மீ. தொலைவில் உள்ளது. 785 சதுர கி.மீ. 2 பரப்பளவு கொண்ட பெக்கோ, சிகாமட் மாவட்டத்தில் மிகப்பெரிய முக்கிம் ஆகும்.
இயற்கை ஆர்வலர்களால் நன்கு அறியப்பட்ட இந்த நகரம், எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவின் மேற்கு நுழைவாயிலாகவும் உள்ளது. சுங்கை பந்தாங் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் ஒரு நீர்வீழ்ச்சியும் இங்கு உள்ளது.[2]
கம்போங் குடோங் மற்றும் கம்போங் கெமிடாக் போன்ற பல மலேசியப் பழங்குடியினர் குடியிருப்புகளையும் பெக்கோக் கொண்டுள்ளது. மலாயா சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், இந்த நகரம் பிரித்தானிய மலாயா அரசாங்கத்திற்கு எதிரான கம்யூனிச செயல்பாடுகளின் "கருப்பு பகுதி" எனவும் அறியப்படுகிறது.
Remove ads
பொது

இந்த நகரத்தின் பெயர் முதலில் ]]சீன மொழி]]யின் ஒரு பிரிவான ஆக்கா பேச்சு வழக்கின் சொல்லான "முகோக்" என்பதிலிருந்து வந்திருக்கலாம் எனவும் அறியப்படுகிறது. முகோக் என்பது "மூலை" என்று பொருள்படும்.
இந்த நகரம் கூட்டரசு சாலை 1 (மலேசியா)-இன் சந்திப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கூட்டரசு சாலை 1 (மலேசியா)-இன் சந்திப்பில் இருந்து இந்த நகரத்தைப் பின்னர் தொடருந்துகள் வழியாக அணுகலாம்.
Remove ads
மக்கள்தொகையியல்
2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மலேசிய புள்ளியியல் துறை வழங்கியுள்ள புள்ளிவிவரங்கள்:[3]
கல்வி
தொடக்கக் பள்ளிகள்
- செரி பெக்கோக் தேசியப் பள்ளி - Sekolah Kebangsaan Seri Bekok
- கம்போங் கூடுங் தேசியப் பள்ளி - Sekolah Kebangsaan Kampong Kudung
- பெக்கோக் தமிழ்ப் பள்ளி - Sekolah Jenis Kebangsaan (Tamil) Bekok
- பெக்கோக் சீனப் பள்ளி - Sekolah Jenis Kebangsaan (Cina) Bekok
உயர்நிலை பள்ளி
- பெக்கோ உயர்நிலைப் பள்ளி - Sekolah Menengah Kebangsaan Bekok
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads