பெட்ரோனாஸ் கோபுரம் 3
மலேசியாவின் எட்டாவது உயரமான கட்டிடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெட்ரோனாஸ் கோபுரம் 3 (மலாய்; Menara Petronas 3; ஆங்கிலம்: Petronas Tower 3) (Carigali Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (Kuala Lumpur City Centre) (KLCC), 267 மீ (876 அடி) உயரத்தில் உள்ள 60-அடுக்கு வானளாவிய கட்டிடமாகும்.[1][2]
இந்தக் கோபுரம் மலேசியாவின் எட்டாவது உயரமான கட்டிடமாகும். மேலும் இந்தக் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்களின் வளாகத்தில் (Petronas Towers Complex) ஒரு பகுதியாகும்.
இந்தக் கட்டிடத்தின் கீழே உள்ள 6- மாடிகள் வரைக்கும் சூரியா கேஎல்சிசி (Suria KLCC) வணிக வளாகத்திற்கு உட்பட்டவை; அதற்கும் மேலே உள்ள மற்ற மாடித் தளங்கள் அலுவலக இடங்களைக் கொண்டவையாகும்.
Remove ads
பொது
இந்தக் கட்டிடத்தில் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பெட்ரோனாஸ் சாரிகாலி (Petronas Carigali) நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது; மற்றும் மைக்ரோசாப்ட் மலேசியா (Microsoft Malaysia) போன்ற பிற பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் துணை நிறுவனங்களும் உள்ளன.
பெட்ரோனாஸ் கோபுரம் 3 கோபுரத்தின் கட்டுமானத் திட்டத்தில் தற்போது இரண்டாம் கட்டம் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டத் திட்டம்
இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தில் லாட் சி (Lot C) எனும் வணிக வளாகம்; பிஞ்சாய் ஆன் தி பார்க் (Binjai On The Park) எனும் சொகுசு மாளிகைக் கட்டுமானத் துணைத் திட்டமும் அடங்கும்.
இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கான செலவு ரிங்கிட் 1 பில்லியன் (ரிங்கிட் 1,000 மில்லியன்) என மதிப்பிடப்பட்டு உள்ளது.[3]
Remove ads
கட்டுமானம்
முதலாம் கட்டக் கட்டுமானம் 2006-இன் இறுதியில் தொடங்கப்பட்டு 2012-இல் நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்டக் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
பெட்ரோனாஸ்
பெட்ரோலியம் நேசனல் பெர்காட் (Petroliam Nasional Berhad) என்பதின் சுருக்கமே பெட்ரோனாஸ் ஆகும். இது ஆகத்து 17, 1974-இல் நிறுவப்பட்ட மலேசிய எண்ணெய் மற்றும் கனிவள நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் முற்றிலும் மலேசிய அரசாங்கத்திற்கு உரிமையானது. மலேசிய நாட்டின் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதும் பராமரிப்பதையும் பெட்ரோனாஸ் நிறுவனம்நோக்கமாக கொண்டுள்ளது.
சொத்து மதிப்பு
பார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், பெட்ரோனாஸ் நிறுவனம் 2022-ஆம் ஆண்டில் 216-ஆவதாகவும், 2021-ஆம் ஆண்டில் 277-ஆவதாகவும் இடம்பெற்றுள்ளது.[4][5]
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ், அமெரிக்க டாலர் US$152.50 பில்லியன் (ரிங்கிட் RM679.70 பில்லியன்) மொத்த சொத்துக்களைக் கொண்டுள்ளது; மற்றும் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
காட்சியகம்
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு இடது புறத்தில்: பெட்ரோனாஸ் கோபுரம் 3; அதன் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

