பெரியார் நகர் (சென்னை)

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

பெரியார் நகர் (சென்னை)map
Remove ads

பெரியார் நகர் (Periyar Nagar) இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கில் அமைந்துள்ள மக்கள் தொகை அடர்த்தியான புறநகர்ப் பகுதியாகும்.[2] வாகன எரிபொருட்கள் விற்பனை நிலையங்கள், துணிக்கடைகள், மருத்துவ வசதிகள், உடற்பயிற்சி மையங்கள், காய்கனிகள் விற்பனைக் கடைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், உடல், முக, சிகை அலங்காரங்கள் நிலையங்கள், தோட்டக்கலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை நிலையங்கள் என பலதரப்பட்ட மக்களின் தேவைக்கேற்ப சேவைகள் நிறைந்த பகுதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

விரைவான உண்மைகள் பெரியார் நகர் (சென்னை) Periyar Nagar பெரியார் நகர், நாடு ...
Remove ads

அமைவிடம்

இந்த ஊர் 13.115540°N 80.223432°E என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி, அகரம், திரு. வி.க. நகர், ஜவஹர் நகர், செம்பியம் மற்றும் பெரம்பூர் ஆகிய ஊர்களுக்கும் அருகில் பெரியார் நகர் அமைந்துள்ளது.

போக்குவரத்து

பேருந்து போக்குவரத்து

இங்கு பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அதிகாலை முதல் இரவு வரை இங்கிருந்து சென்னை நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறுகின்றன.[3]

தொடருந்து போக்குவரத்து

அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்:

வானூர்திப் போக்குவரத்து

சென்னை பன்னாட்டு விமான நிலையம் இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

Remove ads

கல்வி

பள்ளிக்கூடங்கள்

பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் தனியார் பள்ளிகள் சிலவும் உள்ளன.

கல்லூரி

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த ஆண்டு துவக்கப்பட்டுள்ள 'அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி' தற்காலிகமாக, கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இது இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

மருத்துவ வசதி

இங்குள்ள 'அரசு புறநகர் மருத்துவமனை' நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை ஆகும்.[4] பெரியார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தொழில்

உலகப் பிரசித்தி பெற்ற பெரம்பூர் 'இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை', இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்வூர் மக்களில் பெரும்பாலானோர் இங்கு வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

பூங்கா

பெருநகர சென்னை மாநகராட்சி பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது.

விளையாட்டு மைதானம்

பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் ஒன்றும் உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

இந்துக் கோயில்கள், கிறித்தவ ஆலயங்கள், முஸ்லீம் பள்ளிவாசல்கள் என மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதல் தலங்கள் உள்ள ஊர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads