பெர்சவல் மாவட்டம்

மணிப்பூரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பெர்சவல் மாவட்டம்
Remove ads

பெர்சல் மாவட்டம் (Pherzawl) (Pron:/ˌpherˈzâwl/) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பெர்சல் நகரம் ஆகும். சுராசாந்துபூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் பெர்சல் மாவட்டம், நாடு ...
Remove ads

அமைவிடம்

Thumb
மணிப்பூர் மாநிலத்தின் தென்மேற்கில் பெர்சல் மாவட்டத்தின் அமைவிடம்

மணிப்பூர் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்ந்த பெர்சல் மாவட்டத்தின் கிழக்கில் சுராசாந்துபூர் மாவட்டம், வடக்கில் தமெங்கலாங் மாவட்டம் மற்றும் ஜிரிபாம் மாவட்டம், மேற்கில் அசாம் மாநிலத்தின் கசார் மாவட்டம், தெற்கில் மிசோரம் மாநிலத்தின் சிங்லுங் மலைகள் எல்லைகளாக உள்ளது. இம்மாவட்டம் கிழக்கில் 93° 11' 16.0440' பாகையும், வடக்கில் 24° 15' 43.0524 பாகைகளுக்கிடையே மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் ஏறத்தாழ 200 கிராமங்களைக் கொண்டுள்ளது.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[2]அவைகள்:

  1. பெர்சல் வட்டம்
  2. பர்புங்க் வட்டம்
  3. தன்லோன் வட்டம்
  4. வங்காய் மலைகள் வட்டம்

தட்ப வெப்பம் & புவியியல்

இம்மாவட்டத்தின் குறைந்தபட்ச வெப்பம் 3.4 °C (38.1 °F) ஆக்வும்; அதிகபட்ச வெப்பம் 34.1 °C (93.4 °F) உள்ளது. சராசரி ஆண்டு மழைப்பொழ்வு 670 முதல் 1,450 mm (26 முதல் 57 அங்) ஆகவுள்ளது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 1037 மீட்டர் (3,402 அடி) உயரத்தில் கிழக்கு இமயமலைப் பகுதியில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads