மங்களூர் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்களூர் பல்கலைக்கழகம் (Mangalore University) என்பது இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் உள்ள கொனாஜேவில் அமைந்துள்ள பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். மங்களூர் பல்கலைக்கழகம் தெற்கு கன்னட மாவட்டம், உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.[1]
Remove ads
வரலாறு
கடற்கரை நகரமான மங்களூருக்குத் தென்கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மங்கள கங்கோத்ரியில் மங்களூர் பல்கலைக்கழக வளாகத்தில் இப்பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகம் 353 ஏக்கர் பரப்பளவில் அழகிய வளாகத்தில் அமைந்துள்ளது. மைசூர் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மையமாகச் செயல்பட்ட இந்நிறுவனம் 1980-ல் பல்கலைக்கழகமாக மேம்பாடு அடைந்தது. மூன்று முதுநிலை துறைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த வளாகத்தில், தற்பொழுது 26 முதுநிலை துறைகள் உள்ளன. நவீன உள்கட்டமைப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடன் மங்களூர் பல்கலைக்கழகம் 204 இணைப்புக் கல்லூரிகளுடன், இரண்டு இணைவுக் கல்லூரிகளுடன் (மங்களூர் மற்றும் மடிகேரி) மற்றும் ஐந்து தன்னாட்சிக் கல்லூரிகளுடன் வளர்ச்சிபெற்றுள்ளது. குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை வட்டத்தில் சிக்க அலுவாராவில் ஞான காவேரி என்ற முதுநிலை மையத்தையும் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது.
Remove ads
முன்னாள் மாணவர்கள்
- வி. ஜி. சித்தார்த்தா, இந்திய தொழிலதிபர் மற்றும் காபி டே நிறுவனர்
- டி. வி. சதானந்த கெளடா, இந்திய அரசியல்வாதி [9]
- வீரப்ப மொய்லி, இந்திய அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர்
- சத்யா நாடெல்லா, மைக்ரோசாப்ட் தலைவர் மற்றும் நிர்வாக முதன்மை அதிகாரி[10]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads