மத்திய செபராங் பிறை மாவட்டம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மத்திய செபராங் பிறை மாவட்டம்map
Remove ads

மத்திய செபராங் பிறை மாவட்டம் (ஆங்கிலம்: Central Seberang Perai District; மலாய்: Daerah Seberang Perai Tengah (SPT); சீனம்: 威中县); ஜாவி: دسبرڠ ڤراي اوتارا ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் மத்திய செபராங் பிறை மாவட்டம், நாடு ...

இந்த மாவட்டம் 238 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2010-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 395,100 மக்கள் தொகையைக் கொண்டு இருந்தது.

மத்திய செபராங் பிறை மாவட்டத்தின் வடக்கே இருக்கும் வடக்கு செபராங் பிறையைப் பிறை ஆறு பிரிக்கிறது. தெற்கில் இருக்கும் தெற்கு செபராங் பிறையைச் சுஞ்சோங் ஆறு (Junjong River) பிரிக்கிறது. கிழக்கில் கெடாவின் மாநில எல்லை பிரிக்கிறது. தெற்கில் பினாங்கு தீவில் இருந்து, பினாங்கு நீரிணை பிரிக்கிறது.

Remove ads

பொது

ஜூரு ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து பினாங்கு நீரிணையில் கலக்கிறது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் புக்கிட் மெர்தாஜாம்.

கனரகத் தொழில்துறைப் பகுதிகள் மத்திய செபராங் பிறையின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்து உள்ள இதர இடங்கள்:

நிர்வாகப் பிரிவுகள்

Thumb
புக்கிட் மெர்தாஜாம் இரயில் நிலையம்
Thumb
புக்கிட் மெர்தாஜாம் புனித அன்னைமேரி தேவாலயம்
Thumb
புக்கிட் மெர்தாஜாம் மலை

மத்திய செபராங் பிறை மாவட்டம் 21 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மற்றும் புக்கிட் மெர்தாஜாம்; பிறை ஆகிய இரு நகரங்களையும் உள்ளடக்கியது.[1][2][3]

மேலதிகத் தகவல்கள் முக்கிம், பகுதி ...
Remove ads

மக்கள் தொகையியல்

கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[4]

மேலதிகத் தகவல்கள் இனக்குழுக்கள், இனம் ...
மேலதிகத் தகவல்கள் இனக்குழுக்கள், இனம் ...

மலேசிய நாடாளுமன்றம்

மலேசிய நாடாளுமன்றத்தில் மத்திய செபராங் பிறை மாவட்டத்தின் பிரதிநிதிகள் (டேவான் ராக்யாட்)

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...
Remove ads

மத்திய செபராங் பிறை மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; பினாங்கு; மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,823 மாணவர்கள் பயில்கிறார்கள். 157 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads