மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

விரைவான உண்மைகள் வதாரண்யேசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் மயிலாடுதுறையின் திருஇந்தளூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் தீர்த்தம் காவிரி ஆகும்.[2]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வதாரண்யேசுவரர் உள்ளார். இறைவி ஞானாம்பிகை ஆவார்.[2]

அமைப்பு

சிவன் கோயில்களில் நந்தியை மூலவரான லிங்கத்திருமேனி முன்பு காணமுடியும். இக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுகிறது.இந்த தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். காவிரியில் நந்தி நீராடிய இடம் ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோயில் உள்ளது.இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்குமென்று நம்புகின்றனர். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்த பலனுக்கு நிகர் கிடைக்கும் என்கின்றனர். சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலமாகும்.கோயிலின் வடக்கில் ஞான புஷ்கரணி உள்ளது.[2]

வரலாறு

முன்பொரு முறை தர்மம் ரிஷப உருவமெடுத்து சிவனை அழைத்துச்சென்ற காலகட்டத்தில் பார்வதி மயில் உருவமெடுத்து சிவனுக்கு பூசை செய்து கொண்டிருந்தார். இந்த அரிய காட்சியை காண பிரம்மா அன்னத்திலும், பெருமாள் கருடன்மீதும், தேவர்கள் குதிரை மீதும் வந்தனர். மற்றவர்களைவிட வேகமாகச் சென்ற ரிஷபத்திற்கு தான் வேகமாகச் செல்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது. இதை உணர்ந்த சிவன் தன் முடி ஒன்றை எடுத்து அதன்மீது வைத்து அதன் வேகத்தை அடக்கியதாகக் கூறுவர்.இப்பாவத்தைப் போக்க நந்தியை காவிரிக்கரையில் தவம் செய்ய இறைவன் கூறினார். பின்னர் ஞானத்தைப் பெற்ற நந்தி சிவனுடையே இருக்கவேண்டும் என்ற தன் ஆவலைப் வெளிப்படுத்தியது. அவரும் நந்தியின் எண்ணத்தைப் பூர்த்தி செய்தார்.[2]

Remove ads

திருவிழாக்கள்

ஐப்பசியில் துலா மாத விழா, ஐப்பசி அமாவாசை, கார்த்திகை கடைசி வியாழன் போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads