மலாக்கா விலங்கியல் பூங்கா

மலேசியாவின் மலாக்காவில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா From Wikipedia, the free encyclopedia

மலாக்கா விலங்கியல் பூங்காmap
Remove ads

மலாக்கா விலங்கியல் பூங்கா (மலாய்: Zoo Melaka; ஆங்கிலம்: Malacca Zoo சீனம்: 马六甲动物园) என்பது மலேசியா, மலாக்கா, ஆயர் குரோ, தேசிய நெடுஞ்சாலை 143-இன் (Federal Route 143) இருமருங்கிலும் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும்.

விரைவான உண்மைகள் மலாக்கா விலங்கியல் பூங்கா, திறக்கப்பட்ட தேதி ...

இந்த விலங்கியல் பூங்காவில் 215 இனங்களைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. சிலாங்கூர் மாநிலத்த்ல் உள்ள மலேசிய விலங்கியல் பூங்காவிற்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய விலங்கியல் பூங்காவாகத் திகழ்கின்றது.

2007-ஆம் ஆண்டு “மலேசியாவிற்கு வருக” (Visit Malaysia) என்ற பரப்புரை மூலம் உச்ச அளவாக 619,194 பார்வையாளர்கள் மலாக்கா பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.

Remove ads

வரலாறு

1963-ஆம் ஆண்டில் மலேசிய விலங்கியல் பூங்காவுடன் (Zoo Negara) இணைந்து இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் 1979-ஆம் ஆண்டில் பூங்காவின் நிர்வாகம் மலேசியாவின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையால் நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டது.

இதனால் இப்பூங்கா தனது நடவடிக்கைகளை மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நன்மை அளிக்கும் சேவைகளை அளித்து வருகிறது. இது 1987-ஆம் ஆண்டு ஆகத்து 13-ஆம் தேதி அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களால் பொது மக்களுக்கு திறக்கப் படுவதற்கு முன்பாக ஒரு வனவிலங்கு மீட்பு தளமாகப் பயன்படுத்தப்பட்டது.

இது பொதுமக்கள் பார்வைக்காக நீண்ட காலமாக திறக்கப்பட்டு இருந்தாலும், இன்றும் வன விலங்கு மீட்புப் பணிகள் மற்றும் விலங்கு சரணாலயப் பணிகளுக்கான மையமாகச் செயல்படுகிறது. தற்போது இப்பூங்கா பல பறவைகள், இருவாழ்வி, ஊர்வன, பாலூட்டிகள், பூச்சிகள் போன்றவற்றின் வாழிடமாக உள்ளது.[2][3][4]

Remove ads

விலங்கியல் பூங்கா

Thumb
மஞ்சள் மக்காவு கிளி

அருகிவரும் இனமான சுமாத்திரா காண்டாமிருகங்களை (Sumatran Rhinoceros) காட்சிப் படுத்திய முதல் பூங்காவாக மலாக்கா விலங்கியல் பூங்கா திகழ்கிறது.

வெள்ளைக் காண்டாமிருகம் (White Rhinoceros), ஆசிய யானைகள், சிவப்பு பாண்டா, மலேசியக் காட்டெருது, மறிமான் வ், அணில் குரங்கு, இந்திய மலைப் பாம்பு , சாம்பல் ஓநாய், மங்கோலியக் காட்டு குதிரை, பச்சை நிற மர மலைப்பாம்பு, ஒட்டகச்சிவிங்கி, நீல-மஞ்சள் மக்காவு பஞ்சவர்ணக்கிளி, இந்தோ சீனப் புலி, மலாய் புலி போன்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விலங்கினங்களின் வாழிடங்களாகச் செயல்பட்டு வருகிறது.[5][6][7]

சராசரியாக ஒரு நாளைக்கு 1093 பார்வையாளர்கள் வீதம் வருடத்திற்கு 400,000 பார்வையாளர்கள் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.[8][9] பூங்கா திறக்கப்பட்டதில் இருந்து உச்ச அளவாக 2007-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்குச் சராசரியாக 1619 பார்வையாளர்களுடன் மொத்தம் 619,194 பார்வையாளர்கள் இந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர்.

குளிர்ச்சியான மழைக் காடுகள்

2007-ஆம் ஆண்டில் மட்டும் இந்தப் பூங்கா 3.99 மில்லியன் மலேசிய ரிங்கிட் ($ 886,666) வருவாய் ஈட்டியது. அதில் 130,000 ரிங்கிட் இலாபமாகக் கிடைத்தது.[10] ஒரு ஆரோக்கியமான, குளுமைமிக்க பசுமையான பின்னணி இப்பூங்காவால் பராமரிக்கப் படுவதால் மிகவும் வெப்பமான கோடை காலங்களில் கூட குளிர்ச்சியான மழைக் காடுகளைப் போன்று அடையாளப் படுத்துவதற்கு இது உதவுகிறது.

பார்வையாளர்கள் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வருவதற்கு உதவக் கூடிய அமிழ் தண்டூர்தி வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன் கட்டண விலைகள் மலேசிய ரிங்கிட் 2-க்கும் குறைவாக உள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் உணவகங்கள், சிற்றுண்டிக் கூடங்கள் போன்றவை 'மரினா செனோராய்' அருகில் அமைந்துள்ளன.

Remove ads

ஈர்ப்புகள்

Thumb
நீல மஞ்சள் மக்காவு கிளி

கீழ்க்காணும் சாட்சிகள் உள்ளிட்ட ஈர்ப்புகள் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறு காட்டுப்பயணம் [11]
  • பல விலங்கின காட்சி[12]
  • யானைக்காட்சி
  • யானை மற்றும் குதிரை சவாரி
  • வெளியேறும் வாயிலில் உள்ள நினைவுப் பரிசகம்
  • இரவுக் காட்சியகம் [13]

மேலும் காண்க

மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads