மலேசிய நெடுஞ்சாலை வாரியம்
மலேசிய அரசு வாரியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (மலாய்: Lembaga Lebuhraya Malaysia; ஆங்கிலம்: Malaysian Highway Authority) (LLM); என்பது மலேசிய பொதுப் பணி அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு வாரியம் ஆகும். தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்துச் சுங்கச் சாவடிகளையும் மேற்பார்வையிடும் பொறுப்பு இந்த வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.[1]

இந்த வாரியம் மலேசிய நாடாளுமன்றச் சட்டம் 231 (1980) (Parliament Act 231(1980) - சட்டத்தின் கீழ் சட்ட ஒப்புதல் பெற்ற ஓர் அமைப்பாகும்.
மலேசியாவில் சுங்கச் சாவடிகளைக் கொண்ட நெடுஞ்சாலைகளில் பராமரிப்புச் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், மேற்பார்வை செய்தல் போன்ற பொறுப்புகள் இந்த வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
Remove ads
பொது
மலேசிய நெடுஞ்சாலை வாரிய மேற்பார்வையின் கீழ் திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு பராமரிக்கப்படும் முதல் சுங்கச்சாவடி மலேசிய வடக்கு தெற்கு நெடுஞ்சாலை ஆகும். இதுவே மலேசியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை ஆகும்.
1995-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த விரைவுச்சாலை, 15 மாதங்களுக்கு முன்னதாகவே 1994 பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.[2]
1994 செப்டம்பர் 8-ஆம் தேதி, மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.[2]
தனியார் மயமாக்கல்
அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையின் விளைவாக, இந்த நெடுஞ்சாலையும் அதன் பின்னர் கட்டப்பட்ட ஏனைய நெடுஞ்சாலைகளும் தனியார் மயமாக்கப்பட்டன.
மார்ச் 1988-இல் மலேசிய வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை ஆகிய சாலைகளைத் தனியார் மயமாக்கலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுவே மலேசிய அரசாங்கத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டத் தனியார் மயமாக்கலாகும். இந்த ஒப்பந்தம் சூன் 1, 1988 தொடங்கி 30 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
Remove ads
அலுவலகங்கள்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads