மாசுக்கோ மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாசுக்கோ மாகாணம் (Moscow Oblast, உருசியம்: Моско́вская о́бласть, மாஸ்கொவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் பரப்பளவு 45,900 கி.மீ. 2 (17,700 சதுர மைல்) இது மற்ற நடுவண் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, ஆனால் அது நாட்டின் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாகும்.[10] இதன் மக்கள் தொகை 7,231,068 (2015) ஆகும், உருசியக் கூட்டமைப்பின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.[6] இந்த மாகாணம் 1929 இல் நிறுவப்பட்டது.
இதன் எல்லைகளாக வடமேற்கில் துவேர் மாகாணம், வடக்கில் யாரோசிலாவ் மாகாணம், வடகிழக்கு மற்றும் கிழக்கில் விளதீமிர் மாகாணம்ம், தென்கிழக்கில் ரியாசன் மாகாணம், தெற்கில் தூலா வட்டாரம், தென்மேற்கில் கலூகா மாகாணம், மேற்கில் சிமோலியென்சுக் மாகாணம் ஆகியன அமைந்துள்ளன. உலோகம், எண்ணெய் சுத்திகரிப்பு, இயந்திர பொறியியல், உணவு, எரிசக்தி, வேதிப்பொருட்கள் உற்பத்தி முதலிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்த ஓப்லஸ்து பெருமளவில் தொழில்மயமாகியுள்ளது.
Remove ads
நிலவியல்

ஓப்லஸ்து பெருமளவில் சமவெளியாக உள்ளது. இதில் சுமார் 160 மீ (520 அடி) உயரம் கொண்ட சில மலைகள் உள்ளன. மாஸ்கோ ஓப்லஸ்து கிழக்கு ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
காலநிலை
மாஸ்கோ ஓப்லஸ்து காலநிலையில் குறுகிய ஆனால் வெப்பமான கோடைக் காலமும், நீண்ட குளிர் காலமும் கொண்டது. சராசரி ஆண்டு வெப்பநிலை +3.5 °செல்சியஸ் (38.3 °பாரங்கீட்) முதல் +5.5 °செல்சியஸ் (41.9 °பாரங்கீட்) வரை இருக்கும்.
குளிரான மாதங்கள் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும். இம்மாதங்களின் சராசரி வெப்பநிலை மேற்கு பகுதிகளில் −9 °செல்சியஸ் (16 °பாரங்கீட்) கிழக்கில் −12 °செல்சியஸ் (10 °பாரங்கீட்). ஆர்க்டிக் காற்றுவீசும் காலத்தில், வெப்பநிலை - 20 °செல்சியஸ் (- 4 °பாரங்கீட்) வரை குறையும். இந்த குளிர்காலக்காற்று இருபது நாட்கள் வரை நீடிக்கும். சிலவேளைகளில் -45 °செல்சியஸ் (-49 °பாரங்கீட்) முதல் -54 °செல்சியஸ் (-65 °பாரங்கீட்) வரை வெப்பநிலை வீழ்ச்சியடைந்து காணப்படும்.
பொதுவாக நவம்பரில் பனிமழை துவங்கும், சிலசமயம் செப்டம்பரிலோ அல்லது திசம்பரிலோ துவங்கும். ஏப்ரல் மாதத்தினிடையில் (சில சமயம் மார்ச் மாத பிற்பகுதியில்) பனிமழை மறையும். பனி ஆழம் 25-50 சென்டிமீட்டர் (9.8-19.7 அங்குலம்) மண் 65-75 சென்டி மீட்டர் (26-30) வரை உறையும். வெப்பமான மாதம் சூலை மாதமாகும் சராசரி கோடைக்கால வெப்பநிலை வடமேற்கில் +18.0 °செல்சியஸ் (64.4 °பாரங்கீட்) தென்கிழக்கில் +20.0 °செல்சியஸ் (68.0 °பாரங்கீட்) ஆகும்.
அதிகபட்ச வெப்பநிலையான +40 °செல்சியஸ் (104 °பாரங்கீட்)ஆக கலோம்னா பகுதியில் 2010 இல் பதிவானது. சராசரி மழையளவு 450-650 மில்லி மீட்டர் (18-26 அங்குலம்), வடமேற்குப்பகுதிகளில் மிகுந்தும், தென்கிழக்குப்பகுதிகளில் குறைந்தும் மழை பொழியும்.[11][12][13]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads