மினாங்கபாவு பெருநிலம்
மேற்கு சுமாத்திரா மாநிலத்தில் உள்ள ஒரு மலைப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மினாங்கபாவு பெருநிலம் அல்லது மினாங்கபாவு பீடபூமி (ஆங்கிலம்: Minangkabau Highlands; மலாய்: Dataran tinggi Minangkabau; இந்தோனேசியம் Dataran Tinggi Minangkabau, மினாங்கபாவு: Minang Darek) என்பது இந்தோனேசியா, மேற்கு சுமாத்திரா மாநிலத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியாகும்.

இந்த மலைப் பகுதி இந்தோனேசியாவின் மேற்கு-மத்திய சுமாத்திராவின் மெராப்பி எரிமலை, சிங்கலாங் மலை மற்றும் சாகோ மலை ஆகிய மூன்று மலைகளைச் சுற்றி அமைந்துள்ளது.
Remove ads
பொது

மெராப்பி எரிமலை, சிங்கலாங் மலை, சாகோ மலை ஆகிய மலைப்பகுதிகள் பாரிசான் மலைகள் பகுதி என அழைக்கப்படுகிறது. இது சுமத்திராவின் மிகப்பெரிய மலைத்தொடராகும். பெரும்பாலான மினாங்கபாவு மக்கள் இங்குதான் வாழ்கின்றனர். மினாங்கபாவு மக்கள் அப்பகுதியை மினாங்கபாவு உலகம் (Alam Minangkabau) என்று குறிப்பிடுகின்றனர்.[1] இந்தப் பகுதி 7-ஆம் நூற்றாண்டிலிருந்து மெலாயு இராச்சியம் (Malayu Kingdom) என தற்போது அறியப்படும் ஓர் இராச்சியத்தை உருவாக்கியது.[2]
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, மினாங்கபாவு மக்கள் வாழும் மலைப்பகுதிகளில் ஈரநெல் வேளாண்மை சிறப்பாக வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தது. சுமத்திராவின் பிற பகுதிகளில் ஈரநெல் வேளாண்மை நடைபெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பாகவே மினாங்கபாவு மலைப்பகுதிகளில் ஈரநெல் வேளாண்மை நடந்துள்ளது. மேலும் அங்கு வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படுவதற்கு முன்னரே ஈரநெல் சாகுபடி பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. [3]
Remove ads
தங்க வணிகம்
இப்பகுதியில் ஆதித்தியவர்மன் (1347–1375) ஆட்சியின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[4] இடச்சுக்காரர்கள் 1680-களில் மினாங்கபாவு மலைப்பகுதிகளின் தங்க இருப்புக்களைக் கைப்பற்றத் தொடங்கினர்.[5]
இடச்சுக்காரர்கள் அப்பகுதியின் தங்க வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். 1820 மற்றும் 1899-க்கு இடைப்பட்ட காலத்தில், மலைப்பகுதிகளுக்கும் கடற்கரை துறைமுகங்களுக்கும் இடையிலான வர்த்தகப் பாதைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தினர். இது அரிசி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியது.[6]
பள்ளத்தாக்குகள்
மினாங்கபாவு மலைப்பகுதிகள் மூன்று பெரிய பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளன:[7]
- தானா டாத்தார் பள்ளத்தாக்கு
- அகாம் பள்ளத்தாக்கு
- லீமா புலோ பள்ளத்தாக்கு
மினாங்கபாவு பெருநிலத்தில் உள்ள பெலிம்பிங் கிராமம் அதன் மினாங்கபாவு கட்டிடக்கலைக்கு நன்கு அறியப்படுகிறது.[8]
Remove ads
காட்சியகம்
- மினாங்கபாவ் இளம் தம்பதியினர்
- மினாங்கபாவ் இல்லம்
- மினாங்கபாவ் நடன நிகழ்ச்சி
- மினாங்கபாவ் பெண்கள்
- மினாங்கபாவ் திருமணம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads