முகிபா எல்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் ஓர் இலகு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

முகிபா எல்ஆர்டி நிலையம்map
Remove ads

முகிபா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Muhibbah LRT Station; மலாய்: Stesen LRT Muhibbah; சீனம்: 轻轨穆希巴站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]

விரைவான உண்மைகள் SP20 முகிபா, பொது தகவல்கள் ...

கோலாலம்பூர் கம்போங் முகிபா (Kampung Muhibbah) குடியிருப்புப் பகுதியில் உள்ளது. கம்போங் முகிபா என்பது ஒரு கிராமமாகும். கோலாலம்பூரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவில் உள்ளது. முகிபா எல்ஆர்டி நிலையம், கம்போங் முகிபா மற்றும் பார்க்லேன் ஓயூஜி அடுக்குமாடி வீடுகளுக்கு (Parklane OUG Service Apartments) அருகில் 1.0 கி.மீ. நடை தூரத்தில் உள்ள நிலையமாகும்.[3][4]

Remove ads

பொது

முகிபா நிலையத்திலிருந்து அடுத்த நிலையமான அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்திற்கு நடந்து செல்ல முடியும். அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் மிக அருகில் உள்ள நிலையமாக அறியப்படுகிறது.[5]

கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த முகிபா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.

அமைவு

இந்த நிலையத்திற்கு முன்னதாக  SP21  ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக  SP19  அவான் பெசார் எல்ஆர்டி நிலையமும் உள்ளன.

Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...
Remove ads

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

அமைப்பு

L1
பக்க நடைமேடை
நடைமேடை 1 செரி பெட்டாலிங் >>>  AG1   SP1  செந்தூல் தீமோர் எல்ஆர்டி;  AG18  அம்பாங் எல்ஆர்டி (→)  AG11   SP11  சான் சோவ் லின் (→)
நடைமேடை 2 செரி பெட்டாலிங் >>>  SP31  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←)
பக்க நடைமேடை
தரை தரைநிலை கட்டணங்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், நிலையக் கட்டுப்பாடு,(→) கம்போங் முகிபா
G தெருநிலை ஊனமுற்றோருக்கான நட்பு பாதை; இருபுறமும் தெரு நுழைவாயில்கள்
Remove ads

காட்சியகம்

முகிபா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads