மும்பை அடல் பாலம்

From Wikipedia, the free encyclopedia

மும்பை அடல் பாலம்map
Remove ads

அடல் சேது அல்லது மும்பை துறைமுக இணைப்புப் பாலம் (Mumbai Trans Harbour Link) இதனை அதிகாரப்பூர்வமாக அடல் பிகாரி வாச்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் சேது என அழைப்பர். முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இந்த கடல் பாலத்திற்கு அடல் சேது எனப்பெயரிடப்பட்டுள்ளது. 21.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கடல் பாலம் மும்பை மற்றும் நவி மும்பையை 20 நிமிடங்களில் இணைக்கிறது.[6] அடல் பாலம் ஆறு வரிசைகளில் வண்டி செல்ல முடியும். ஒவ்வொரு திசைக்கும் 3 வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் மீது நிறுவப்பட்ட கடல் பாலமான அடல் சேது விரைவுப் பாலத்தை 24 ஏப்ரல்2018 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.[7]இது உலகின் 12வது நீளமான கடல் பாலம் ஆகும். [8][9]

விரைவான உண்மைகள் மும்பை அடல் பாலம், அதிகாரப் பூர்வ பெயர் ...
Thumb
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 12 சனவரி 2024 அன்று பாலத்தை ஆய்வு செய்யும் காட்சி

இப்பாலம் தெற்கு மும்பையில் உள்ள சேவ்ரி பகுதியில் தொடங்கி, எலிபெண்டா தீவுக்கு வடக்கே தானே கடற்கழியைக் கடந்து நவி மும்பையின் ஊரண் தாலுகாவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் அருகே சிர்லே பகுதியில் முடிகிறது. அடல் பாலம், கிழக்கில் மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையையும், மேற்கில் மும்பை கடற்கரை சாலையையும் இணைக்கிறது. அவசரகால வழிகளுடன், 6 வரிசைகள் கொண்ட இக்கடல் பாலம் 27 மீட்டர் அகலம் கொண்டது.

இதன் மொத்த திட்டச் செலவு 17,843 கோடி (ஐஅ$2.1 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் வழியாக ஒரு நாளைக்கு 70,000 வாகனங்கள் செல்கிறது.[10] ஏப்ரல் 2018ல் இப்பாலத்தின் பணி துவக்கப்பட்டது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads