மூன்றாம் சங்கரகனன்

தஹாலாவின் மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூன்றாம் சங்கரகனன் (Shankaragana III, ஆட்சிக்காலம் 970-980 பொ.ச.) மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது. இவன் ஒரு பலவீனமான கூர்ஜர-பிரதிகார மன்னனைத் தோற்கடித்தான். மேலும் சந்தேலர்களுக்கு எதிரான போரில் இவன் இறந்ததாகத் தெரிகிறது.

விரைவான உண்மைகள் மூன்றாம் சங்கரகனன், தஹாலாவின் மன்னன் ...
Remove ads

ஆட்சி

பொ.ச. 970ஆம் ஆண்டு காலச்சூரி மன்னன் இலட்சுமணராசாவுக்குப் பிறகு சங்கர்கனன் ஆட்சிக்கு வந்தான்.[1] சங்கரகனன் தனது அண்டை நாடுகளுக்கு எதிராக பகைமை உணர்வுடன் இருந்தான்.ஜபல்பூர் கல்வெட்டின் படி, இவன் சமகால கூர்ஜர-பிரதிகார அரசரை தோற்கடித்தான். ஒருவேளை இது விசயபாலனாக இருக்கலாம்.[2]

சங்கரகனன் சந்தேலருக்கு எதிரான போரில் இறந்ததாகத் தெரிகிறது. விதிசா கல்வெட்டு ஒன்று சந்தேல அமைச்சன் வாசஸ்பதி என்பவன் சேதி மன்னனையும் (சங்கரகனனுடன் அடையாளம் காணப்பட்டவன்), அவனது கூட்டாளியான சபர தலைவனையும் தோற்கடித்ததாக பெருமை கொள்கிறது. வாசஸ்பதி சந்தேல மன்னன் தங்காவின் சகோதரரான கிருஷ்ணப்பாவின் கீழ் பணிபுரிந்தவன்.[3] சுல்கி குடும்பத்தைச் சேர்ந்த நரசிம்மன் காலச்சூரி மன்னனின் மனைவிகளை விதவைகளாக மாற்றியதாக ஒரு மாசர் கல்வெட்டு கூறுகிறது. இது சந்தேலர்க்களுக்கு எதிரான போரில் சங்கரகனன் தோல்வியடைந்ததைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. [3]

சங்கரகனன் தனது இளைய சகோதரன் இரண்டாம் யுவராசதேவனுக்குப் பின் பதவியேற்றான். [2]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads