மைமன்சிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைமன்சிங் (Mymensingh) (/maɪmɛnsiːŋ/ நகரம் முன்னர் நசீராபாத் என அழைக்கப்பட்டது.[3]இந்நகரம் வங்காளதேச நாட்டின் மைமன்சிங் மாவட்டம் மற்றும் மைமன்சிங் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் மாநகராட்சியும் ஆகும். வங்காளதேச தேசியத் தலைநகர் டாக்காவிலிருந்து வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் மைமன்சிங் நகரம் அமைந்துள்ளது.
வங்காளதேசத்தின் மத்தியப் பகுதியில் அமைந்த மைமன்சிங் நகரம் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மொமன் ஷா எனும் ஆட்சியாளர் என்பவரது பெயரால் இந்நகரத்திற்கு மைமன்சிங் பெயர் வைக்கப்பட்டது. [4]
Remove ads
வரலாறு
பிரித்தானிய கம்பெனி ஆட்சியின் காலத்தில் 16 மாவட்டங்களில் ஒன்றாக மைமன்சிங் மாவட்டம் இருந்தது.[5] மைமன்சிங் நகரத்தின் வடக்கு பகுதியை முவாசாமாபாத் என்றும், தெற்கு பகுதியை நசீராபாத் என்றும் அழைப்பர்.[6] பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் மைமன்சிங் நகரத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தனர்.
இருப்பினும் 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பல இந்துக்கள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அகதிகளாக குடியேறினர். இரண்டாம் முறையாக 1965 இந்திய -பாகிஸ்தான் போரின் முடிவிலும் அதிக எண்ணிக்கையிலான இந்துக்கள் மைமன்சிங் நகரத்திலிருந்து வெளியேறி, இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் குடியேறினர்.
27 மார்ச் 1971-இல் உருவான வங்காளதேச விடுதலைப் போரின் போது மைமன்சிங் நகரத்தை, மேற்கு பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து முக்தி வாகினி விடுதலை படையினர் 11 டிசம்பர் 1971-இல் மீட்டெடுத்தனர்.
Remove ads
சமயங்கள்
மைமன்சிங் நகரத்தில் இந்துக்களும், இசுலாமியர்களும் கூடி வாழும் இடமாக உள்ளது. இங்கு துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மைமன்சிங் நகரத்தில் இராமகிருஷ்ண மடம் சிறப்பாக செயல்படுகிறது.
கல்வி
மைமன்சிங் நகர்ம் கல்வி நிலையங்களுக்கு பெயர் பெற்றது. இந்நகரத்தில் வங்காளதேச வேளாண்மைப் பல்கலைக் கழகம், மைமன்சிங் தொழில்நுட்ப நிறுவனம், மைமன்சிங் மருத்துவக் கல்லூரி, ஜாதிய கபி காஜி நஸ்ரூல் இசுலாமியப் பல்கலைக் கழகம், மைமன்சிங் பொறியியல் கல்லூர், ஆனந்த மோகன் கல்லூரி, மைமன்சிங் இராணுவப் பயிற்சி கல்லூரி, மைமன்சிங் மகளிர் இராணவப் பயிற்சி கல்லூரி, வித்தியாமாயில் அரசு உயர்நிலைப் பள்ளி, மகளிர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சாகித் சையத் நஸ்ரூல் இஸ்லாம் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்கள் உள்ளது.
பொருளாதாரம்
வரலாற்று காலத்திலிருந்து மைமன்சிங் நகரம் சணல் ஆலைகளுக்குப் பெயர் பெற்றது. மேலும் மீன்பிடித் தொழிலும் சிறப்பாக உள்ளது. இரால் மீன் வளர்ப்பு பண்ணைகள் மூலம் இரால் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவனி பெறுகிறது.
தட்ப வெப்பம்
Remove ads
படக்காட்சிகள்
- மொழிப் போர் தியாகிகள் நினைவுச் சின்னம
- வங்காளதேச வேளாண் பல்கலைக்கழகம்
- ஆனந்த மோகன் கல்லூரி
- மைமன்சிங் மருத்துவக் கல்லூரி
- நகரச் சதுக்கம், மைமன்சிங்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads