மொர்தோவியா

From Wikipedia, the free encyclopedia

மொர்தோவியா
Remove ads

மர்தோவியா குடியரசு ( Republic of Mordovia உருசியம்: Респу́блика Мордо́вия, ஒ.பெ Respublika Mordoviya, பஒஅ: [rʲɪsˈpublʲɪkə mɐrˈdovʲɪjə]; Moksha/Erzya: Мордовия Республикась,[13] Mordoviya Respublikas) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் சரான்சுக் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 834,755. ( 2010 கணக்கெடுப்பு )

விரைவான உண்மைகள் மர்தோவியா குடியரசுRepublic of Mordovia, Other transcription(s) ...
Remove ads

புவியியல்

Thumb
மார்தோவியா குடியரசின் வரைபடம்

இக்குடியரசு கிழக்கு ஐரோப்பிய பீடபூமியின் கிழக்குப்பகுதியில் ரஷ்யாக் கூட்டமைப்பில் அமைந்துள்ளது.

  • பரப்பளவு: 26.200 சதுர கிலோமீட்டர் (10,100 சதுர மைல்)
  • எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்):
  • வடக்கில் நைசினி நோவ்கோர்டு ஒப்லாஸ்தும், வடகிழக்கு மற்றும் கிழக்கில் சுவாசியா, கிழக்கிலும் தென்கிழக்கிலும் ஊல்யானோவிஸ்க் ஒப்லாஸ்து, தெற்கு மற்றும் தென்மேற்கில் பென்சா ஒப்லாஸ்து, மேற்கிலும், வடமேற்கிலும் ரயாசன் ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.
  • உயரமான இடம்: 324 மீட்டர் (1,063 அடி)
Remove ads

ஏரிகள்

குடியரசில் சுமார் ஐந்நூறு ஏரிகள் உள்ளன.

இயற்கை வளங்கள்

குடியரசின் இயற்கை வளங்கள் கரி , கனிம நீர் , மற்றும் பல ஆகும்.

காலநிலை

குடியரசின் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாட்டு ஆகும்.

  • சராசரி சனவரி வெப்பநிலை: -11 டிகிரி செல்சியஸ் (12 ° பாரன்கீட்),
  • சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்)
  • சராசரி ஆண்டு மழையளவு : ~ 500 மில்லி மீட்டர் (20)

பொருளாதாரம்

குடியரசில் மிகவும் வளர்ந்த தொழில்கள் இயந்திரக் கட்டுமான நிறுவனங்கள், இரசாயனம், மரப்பொருட்கள், உணவு தொழில்கள்போன்றவை ஆகும். பெரும்பாலான தொழிற்சாலைகள் குடியரசின் தலைநகர் பகுதியிலேயே அமைந்துள்ளன. அத்துடன் கோவைல்கினோ மற்றும் ருசாயேவாகா போன்ற நகரங்களிலும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

குடியரசின் மக்கள் தொகை: 834,755 ( 2010 கணக்கெடுப்பு ) 888,766 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 964,132 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக் குழுக்கள்

குடியரசின் மக்களில் உள்ளன பினிக் மக்கள் தங்கள் மொழியாக தொடர்புடைய இரண்டு மொழிகளை பேசுகின்றனர், அவை மோட்சா மொழி மற்றும் எருசிய மொழி ஆகும். இந்த பினிக் மக்கள் தங்களை தனி இனக் குழுவாக அடையாளம் காண்கின்றனர்.[14] எருசிய மற்றும் மோட்சா மொழிகளை குடியரசில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றனர். சோவியத் காலத்தில், பள்ளி பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு மொழியிலும் வெளியிடப்பட்டன.[15] 2010 கணக்கெடுப்பின்படி,[8] குடியரசில் ரஷ்ய இனக் குழுவினர் குடியரசு மக்கள் தொகையில் 53.4% ​​வரை உள்ளனர். எருசிய மற்றும் மோட்சா இனக்குழுவினர் 40% மட்டுமே உள்ளனர். மற்ற குழுக்கள் என்றால் தடார்களுக்கும் (5.2%), உக்ரைனியர்கள் (0.5%), இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.

Remove ads

மதம்

2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி குடியரசின் மக்கள் தொகையில் 68.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 5% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 2% முஸ்லீம்கள், நாட்டுப்புற மதத்தினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 10% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 7% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். சில மார்தோவியர்கள் புதிய உள்ளூர் மத்தைக் கடைபிடிக்கின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads