யாந்தபு ஒப்பந்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாந்தபு ஒப்பந்தம் (Treaty of Yandabo) முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், (1824-1826) ஆங்கிலேயப் படைகள் பர்மாவை வென்றது.
போரின் முடிவில் 24 பிப்ரவரி 1826 அன்று, கிழக்கிந்திய கம்பெனியின் படைத்தலைவர் ஆர்ச்சி பால்டு காம்பெலுக்கும், கோன்பவுங் வம்சப் பர்மாப் பேரரசின் லிகெயிங் மாகாண ஆளுநர் மகா மின் லா யா ஹிதினுக்கும் (Maha Min Hla Kyaw Htin) இடையே யாந்தாபு கிராமத்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.[1] எனவே இந்த ஒப்பந்தத்திற்கு யாந்தபு ஒப்புந்தம் எனப் பெயராயிற்று.
யாந்தபு ஒப்பந்தப்படி, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் கண்ட ஒப்பந்த விதிகளை நிறைவேற்ற பர்மிய அரசு ஒப்புக்கொண்டது. [1][2]
- அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம், அரக்கான், சல்வீன் ஆற்றின் தெற்கில் உள்ள தானிந்தாயி மற்றும் டெனஸ்செரம் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுத் தரப்பட்டது. [3]
- வடகிழக்கு இந்தியாவில் உள்ள சச்சார் மற்றும் ஜெயந்தியாவில் பர்மிய அரசின் குறுக்கீடுகள் நிறுத்தப்பட்டது.
- போர் இழப்புத் தொகையான ஒரு மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள், நான்கு தவணையில் செலுத்தப்பட்டது.
- பர்மாவிற்கும் - கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே இருதரப்பு தூதுவர்களை அனுமதிக்கப்பட்டது.
- பிரித்தானிய - பர்மா இடையே வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வகை செய்யப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads