ராஜா சூலான் நிலையம்

கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் ஒற்றைத் தண்டூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia

ராஜா சூலான் நிலையம்map
Remove ads

ராஜா சூலான் நிலையம் அல்லது ராஜா சோழன் நிலையம் (ஆங்கிலம்: Raja Chulan Station; மலாய்: Stesen Raja Chulan; சீனம்: 拉惹朱兰站) என்பது மலேசியா, கோலாலம்பூர், சுல்தான் இசுமாயில் சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.

விரைவான உண்மைகள் MR7 ராஜா சூலான், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் கோலாலம்பூர் தங்க முக்கோணத்தின் (Kuala Lumpur Golden Triangle) வடக்குப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. புக்கிட் பிந்தாங் என்பது முன்பு கோலாலம்பூர் தங்க முக்கோணம் என்று அழைக்கப்பட்டது.

Remove ads

பொது

இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2] கோலாலம்பூர் தங்க முக்கோணப் பகுதிக்குச் சேவை செய்யும் நான்கு கோலாலம்பூர் மோனோரெயில் நிலையங்களில் ராஜா சூலான் மோனோரெயில் நிலையமும் ஒன்றாகும்.

மற்ற மூன்று நிலையங்கள்:[3]

இவற்றைத் தவிர, இந்த நிலையத்திற்கு வடக்கே 1 கிலோமீட்டர் தொலைவில் புக்கிட் நானாஸ் நிலையம் உள்ளது.[3]

Remove ads

விரிவாக்கத் திட்டம்

கேஎல் மோனோரெயில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், இந்த நிலையம், 2015-ஆம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இஸ்கோமி (Scomi) நிறுவனத்தின் தயாரிப்பான இஸ்கோமி சூத்ரா (Scomi SUTRA) 4 பெட்டி மோனோரெயில்களை நிறுத்துவதற்காக அந்த விரிவாக்கம் நடைபெற்றது.

மேலும் அண்டை வணிக வளாகங்ககளுக்கு நேரடியாகச் செல்லும் 3 புதிய நுழைவாயில்களும் அந்தப் புதிய நிலையத்தில் இணைக்கப்பட்டன.

ராஜா சூலான்

ராஜா சூலான் எனும் பேராக் சுல்தான் பெயரால் ராஜா சூலான் நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. ராஜா சூலான் (Raja Chulan) என்பவர் பேராக் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். பிரித்தானிய குடியேற்றவிய காலத்தில் மலாய் மக்களின் பொருளாதார நிலை மற்றும் குடிமைப் பணிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தியதற்காக இவர் நினைவு கூரப்படுகிறார்.[4]

இவரின் நினைவாக கோலாலமபூரில் ஒரு சாலைக்கு ராஜா சூலான் சாலை (Jalan Raja Chulan) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின் பழைய பெயர் வெல்ட் சாலை (Weld Road).

கோலாலம்பூர் அரச சூலான் தங்கும் விடுதி

கோலாலம்பூர் மாநகரின் கான்லே சாலையில் உள்ள கோலாலம்பூர் அரச சூலான் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிக்கு (The Royale Chulan Kuala Lumpur) அவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[5] பேராக், ஈப்போ, தாமான் செம்பாக்கா, டெய்ரி சாலையில் உள்ள ராஜா சூலான் தேசிய உயர்நிலைப் பள்ளி - இப்பள்ளிக்கும் ராஜா சூலானின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலையங்களில் ராஜா சூலான் நிலையமும் ஒன்றாகும்.[4] இந்த நிலையம் கூரைகளால் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

நிலைய தள அமைப்பு

L2 தள நிலை பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR11  தித்திவங்சா நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1 இணைப்புவழி கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B
G தெரு நிலை சுல்தான் இசுமாயில் சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C

இந்த நிலையத்தில் 2 வெளியேறும் வழிகள் உள்ளன. அருகிலுள்ள புக்கிட் பிந்தாங் நிலையத்தைப் போலவே, இந்த ராஜா சூலான் நிலையமும், பல்வேறு கடைவல மையங்களுக்கு நடந்து செல்லும் தொலைவில்ல் உள்ளது.

Remove ads

அருகாமை இடங்கள்

இந்த நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள இடங்கள்:[4]

  • விஸ்மா கெந்திங் - (Wisma Genting)
  • கோலாலம்பூர் ஆலிடே இன் விரைவுப் பேருந்து - (Holiday Inn Express Kuala Lumpur)
  • இஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி - தலைமை அலுவலகம் - (Standard Chartered Bank Head Office)

காட்சியகம்

ராஜா சூலான் நிலையக் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads