ராமதீர்த்தம்

From Wikipedia, the free encyclopedia

ராமதீர்த்தம்
Remove ads

ராமதீர்த்தம் (Ramateertham), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தின் தலைமையிட நகரமான விஜயநகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் அருகே உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள போதிகொண்டா மற்றும் பக்தலுகொண்டா மலைகளில், கிமு மூன்றாம் நூற்றாண்டின் பழைமையான பௌத்தம் மற்றும் சமணத் தொல்லியல் களங்கள் உள்ளது.[1]

இங்குள்ள அஞ்சலகத்தின் அஞ்சல் சுட்டு எண் 535 218 ஆகும்.[2]

Thumb
போதிகொண்டாவின் சிதிலமடைந்த பௌத்தக் கோயில்
Remove ads

தொல்லியல் களம்

இராமதீர்த்தம் மலையடிவாரத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டு காலத்தியிய சிதிலமடைந்த சமணம் மற்றும் பௌத்தப் பிக்குகள் தங்குவதற்கான விகாரைகளும் உள்ளது. மேலும் இங்கு ஒரு இராமர் கோயிலும் உள்ளது.

Thumb
குருபக்துலகொண்டா பௌத்த விகாரையின் எஞ்சிய பகுதிகள், ராமதீர்த்தம்
Thumb
ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்

பௌத்தம் மற்றும் சமணம்

ராமதீர்த்தம் மலையில் உள்ள செங்கற்களால் ஆன பௌத்த நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்துள்ளது.

கிமு மூன்றாம் நூற்றாண்டின் சிதிலமைடந்த பௌத்த விகாரையும், சமண சமய குடைவரைகளின் சுவர்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் பௌத்தர்களால் நிறைந்த இவ்விடம், பின்னர் சமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads