லெம்மிங்

கிரிசெடிடாய் குடும்ப விலங்கினங்கள் From Wikipedia, the free encyclopedia

லெம்மிங்
Remove ads

லெம்மிங் (Lemming) என்பது தூந்திரப் பிரதேசங்களில் வாழும் எலி வகையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். இவற்றின் தோல் கோடைகாலத்தில் பழுப்பு நிறமாகவும் குளிர் காலத்தில் பனிக்கட்டி போல வெண்மையானதாக மாறி விடும். தன்னை வேட்டையாடும் பனி ஆந்தை மற்றும் பிற விலங்குளிடமிருந்து தப்பிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். லெம்மிங்குகள் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்றன.[1]

விரைவான உண்மைகள் லெம்மிங், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

உடல் அமைப்பு

இவை உருவத்தில் மிகவும் சிறியவை. சிறிய உருண்டையான தலை, கருமணி போன்ற கண்,வட்டமான சிறிய காது, குட்டையான வால், மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய உடல், தோண்டுவதற்கேற்ற சிறிய கால்கள் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் லெம்மிங்குகள் தனது வாலுடன் சேர்த்து 15 செ.மீ நீளமே உடையவை.

வாழ்க்கை முறை

இது ஒரு தாவர உண்ணியாகும். புல்,பூண்டு, செடிகளின் வேர்கள், இளந்தளிர்கள் ஆகியவற்றை உட்கொள்ளும். லெம்மிங்குகள் மூன்றிலிருந்து 7 அல்லது 8 குட்டிகள் வரை போடும். வருடத்திற்கு இரு முறை இவை குட்டிபோடும். இவை பகையைக் கண்டு அஞ்சாமல் அவற்றுடன் போராடும். இவை கூட்டம் கூட்டமாகவே வாழும். மேட்டுப் பிரதேசங்களில் வாழும் லெம்மிங்குகளின் எண்ணிக்கை சில சமயங்களில் அளவை மீறிப் போகும். அப்பொது அங்கு சுற்றிலுமுள்ள உணவைத் தேடிச் செல்லும்போது அவ்வழியிலுள்ள பயிர் வகைகளையும் இவை தின்று தீர்த்து விடுகின்றன.அவ்வாறு கூட்டமாகச் செல்லும்போது வழியில் ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகள் இருப்பின் அவற்றைக் கடந்தும் செல்லும். அந்த சமயத்தில் இவை நரி, பருந்து போன்ற விலங்கினங்களுக்கு இரையாகி விடுகின்றன.மேலும் கூட்டமாகச் செல்லும் கால்நடைகள், 'லெம்மிங் காய்ச்சல்' இவைகளாலும் இவை அழிகின்றன.

Remove ads

லெம்மிங்குகளின் தற்கொலை

Thumb
பெருங்கூட்டமாக இவை இடம் பெயரும்போது இவை ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் விழுந்து இறந்து விடுகின்றன என்பது உண்மையல்ல அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கூட்டமாக செல்லும் இவைகளைக் கண்டு பழங்கால் நார்வே நாட்டின் உழவர்கள் இவை மேகத்திலிருந்து குதித்து வந்தவை என்றும் இவற்றின் மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை நோக்கி இவை செல்கின்றன என்றும் நம்பினார்கள். எப்படிப்பட்ட தடை நேரினும் லெம்மிங்குகள் தொடர்ந்து முன்னேறிக் கடலை அடையும். அலைகளுக்கு அஞ்சாமல் , கடலின் பரப்பை அறியாத காரணத்தாலும்- அந்த நீர்ப்பரப்பை நீந்தி அப்பால் செல்லலாம் என்ற அறியாமையாலும் இவை யாவும் கடலுள் விழுந்து நீந்துகின்றன. முடிவில் யாவும் கூட்டமாக அழிந்து விடுகின்றன என்ற நம்பிக்கை தவறு என தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads