வட ஆள்புலம்

ஆசுத்திரேலியாவின் ஆட்சிப்பகுதி From Wikipedia, the free encyclopedia

வட ஆள்புலம்map
Remove ads

வட ஆள்புலம் (Northern Territory, சுருக்கமாக NT), முறையாக ஆத்திரேலியாவின் வடக்கு ஆள்புலம் [8][9] என்பது ஆத்திரேலியாவின் மத்திய, மத்திய-வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் உள்ளக ஆள்புலம் ஆகும். வட ஆள்புலத்தின் எல்லைகளாக, மேற்கே மேற்கு ஆத்திரேலியா, தெற்கே தெற்கு ஆத்திரேலியா, கிழக்கே குயின்சுலாந்து ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. வடக்கே, திமோர் கடல், அரஃபூரா கடல், கார்பெண்டாரியா வளைகுடா, மேற்கு நியூ கினி மற்றும் பல இந்தோனேசியத் தீவுகளும் அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் வட ஆள்புலம்Northern Territory, நாடு ...

வட ஆள்புலம் 1,347,791 சதுர கிலோமீட்டர் (520,385 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது,[10] இது மூன்றாவது பெரிய ஆத்திரேலியக் கூட்டாட்சிப் பிரிவாக உள்ளது. திசம்பர் 2021 நிலவரப்படி இது 249,000 மக்கள்தொகையுடன் ஆத்திரேலியாவிலேயே மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.[3] டார்வின் இதன் தலைநகரும், மிகப்பெரிய மக்கள்தொகை மையமும் ஆகும், இது முழு ஆள்புலத்தின் மக்கள்தொகையில் 52.6% ஆகும். ஏறத்தாழ 25,000 மக்கள் வசிக்கும் மிகப்பெரிய உள்நாட்டு குடியேற்றம் ஆலிசு இசுபிரிங்சு ஆகும்.

வட ஆள்புலத்தின் தொல்பொருள் வரலாறு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு சாகுல் கண்டத்தின் இந்தப் பகுதியில் மனிதர்கள் முதன்முதலில் குடியேறியபோது தொடங்கியிருக்கலாம். குறைந்தது 18 ஆம் நூற்றாண்டிலிருந்து, மக்கசான் வணிகர்கள் கடல் நத்தை வர்த்தகத்தைச் சுற்றி வட ஆள்புலத்தின் பழங்குடி மக்களுடன் உறவைத் தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் இந்நிலத்தின் கரையோரப் பகுதி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[11] இதன் கரையோரப் பகுதிகளில் குடியேற முயன்ற முதல் ஐரோப்பியர்கள் ஆங்கிலேயர்கள் ஆவர். அவர்கள் இங்கு ஒரு குடியேற்றத்தை நிறுவுவதற்கான மூன்று (1824-1828, 1838-1849, 1864-1866) தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, 1869 இல் டார்வின் துறையில் ஒரு குடியேற்றத்தை நிறுவுவதன் மூலம் வெற்றி அடைந்தனர்.

இதன் பொருளாதாரம் பெரும்பாலும் சுரங்கத் தொழிலையும், எண்ணெய் அகழ்வையும் அடிப்படையாகக் கொண்டது, இது 2018-2019 ஆம் ஆண்டில் மொத்த மாநில உற்பத்தியில் 23% பங்களித்தது, அல்லது $5.68 பில்லியன், இது ஏற்றுமதியில் 92.4% ஆகும்.[12][13]

வட ஆள்புலத்தின் மக்கள்தொகை கடலோரப் பகுதிகளிலும் இசுட்டூவர்ட் நெடுஞ்சாலை வழியேயும் குவிந்துள்ளது. டார்வின் தலைநகரைத் தவிர, முக்கிய குடியிருப்புகள் (அளவின்படி) பால்மர்ஸ்டன், ஆலிஸ் ஸ்பிரிங்ஸ், கேத்ரின், நுலுன்புய், டெனன்ட் கிரீக் ஆகியவை ஆகும். வட ஆள்புலத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் "ஆள்புலத்தோர்" (டெரிட்டோரியர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.[14]

ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள், பிரதேசங்களின் வரைபடம்
Thumb
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads