வடக்கு வங்காள பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு வங்காள பல்கலைக்கழகம் (University of North Bengal) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும், இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் இராசா இராம்மோகன்பூரில், சிலிகுரியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழக இரண்டாவது வளாகம் மேற்கு வங்காளத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் தங்குஜார் என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஆறு வடக்கு வங்காள மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான சிக்கிம் ஆகியவற்றில் வளர்ந்து வரும் மனிதவள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1962-ல் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. வடக்கு வங்காளப் பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை கற்பித்தல்-ஆராய்ச்சி, முனைவர் மற்றும் முனைவர் பட்ட பின் ஆய்வுத் திட்டங்களில் பட்டங்களை வழங்குகிறது.
Remove ads
வரலாறு
வடக்கு வங்காள பல்கலைக்கழகம் 1962-ல் மேற்கு வங்க சட்டமன்றத்தின் சட்டம் மூலம்[4] நிறுவப்பட்டது. இப்பகுதியில் செயல்படும் முதல் பல்கலைக்கழகம் இதுவாகும். டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச் பெகர், மால்டா, உத்தர் தினஜ்பூர் மற்றும் தெற்கு தினஜ்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் முக்கியமாகக் கிராமப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
2008-ல், கௌர் பங்கா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது மால்டா, உத்தர் தினஜ்பூர் மற்றும் தெற்கு தினஜ்பூர் (ராய்கஞ்ச் பல்கலைக்கழகக் கல்லூரியைத் தவிர) ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 கல்லூரிகளும் புதிதாகத் தோன்றிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.
2012-13ஆம் ஆண்டில், கூச் பெஹார் பஞ்சானன் பர்மா பல்கலைக்கழகம், கூச் பெஹார் மாவட்டத்தின் அனைத்து கல்லூரிகளும் மற்றும் ஜல்பைகுரி மாவட்டத்தின் அலிபுர்துவார் துணைப்பிரிவும் இதனுடன் இணைக்கப்பட்டது. வடக்கு வங்க பல்கலைக்கழகம் டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களின் அதிகார வரம்பைத் தற்பொழுது கொண்டுள்ளது. இது தேசிய மதீப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் முதல் தரப் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது.
Remove ads
வளாகம்
இதனுடையப் பிரதான வளாகம் 330 ஏக்கர்கள் (1.3 km2) பரப்பில் சிலிகுரி மற்றும் பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு இடையே, தெராய் பகுதியில் அமைந்துள்ளது. இரண்டாவது வளாகம் ஜல்பைகுரியில் உள்ள தங்குஜாரில் உள்ளது.
பல்கலைக்கழகத்தில் 36,000 இளநிநிலை மற்றும் 1,500க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆண்டுதோறும் கல்வி கற்கின்றனர். வடக்கு வங்காளத்திலிருந்து முக்கியமாக மலைகள் மற்றும் சமவெளிப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகிறார்கள். வடக்கு வங்காளப் பல்கலைக்கழகம் முதுகலை ஆங்கிலம், தத்துவம், பாங்களா போன்றவற்றில் தொலைதூரக் கல்வியையும் வழங்குகிறது.
Remove ads
அமைப்பு மற்றும் நிர்வாகம்
ஆளுகை
வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். 2018-ல் சுபிரேஷ் பட்டாச்சார்யா இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
பள்ளிகள் மற்றும் துறைகள்
வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தில் 30 துறைகள் இரண்டு கல்வி குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.[5]
- அறிவியல்
அறிவியல் பள்ளியின் கீழ் மானுடவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் பயன்பாடு, உயிரிதொழில்நுட்பம், உயிர்தகவலியல், புவியியல் மற்றும் பயன்பாட்டுப் புவியியல், மருந்து தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், புவியியல், உணவு தொழில்நுட்பம், தேயிலை அறிவியல், தாவரவியல், மற்றும் விலங்கியல் துறைகள் உள்ளன.
- கலை, வணிகம் மற்றும் சட்டம்
இந்த பள்ளி பெங்காலி, ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், நேபாளி, வரலாறு, அரசியல் அறிவியல், தத்துவம், கல்வி, பொருளாதாரம், சமூகவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் விரிவாக்கம், பொதுத் தொடர்பு, சட்டம், வணிகம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளைக் கொண்டுள்ளது.
மையங்கள்
வடக்கு வங்காள பல்கலைக்கழகம் மற்றும் வளாகத்திற்கு வெளியே ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்களுக்கும் இப்பல்கலைக்கழகம் இணைப்பு வழங்குகிறது.
- பல்கலைக்கழக அறிவியல் மற்றும் ஆய்வுக்கருவி மையம்
- கணினி மையம்
- மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையம்
- உயர் ஆற்றல் மற்றும் காஸ்மிக் கதிர் மையம்
- ரிமோட் சென்சிங் பயன்பாட்டிற்கான மையம்
- தேயிலை மேலாண்மை மையம்
- மக்கள் தொடர்பு மையம்
- இமயமலை ஆய்வு மையம்
- பெண்கள் ஆய்வு மையம்
- சமூக ஆராய்ச்சி மையம்
- உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்தில் ஆய்வு மையம்
- சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை மையம்
- சந்தைப்படுத்தல் மேலாண்மை மையம்
- அம்பேத்கர் ஆய்வு மையம்
- புதுமையான ஆய்வுகளுக்கான மையம்
இணைப்புகள்
அலிபுர்துவார், டார்ஜிலிங், ஜல்பைகுரி மற்றும் வடக்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவான இஸ்லாம்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பல்கலைக்கழகம் பல இணைப்புக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது.
Remove ads
கல்வித்திட்டம்
வடக்கு வங்காள பல்கலைக்கழக இரண்டு ஆண்டு முதுகலை, முதுகலை வணிகம், முதுஅறிவியல் கணிப் பயன்பாடு உள்ளிட்ட பலகல்வித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
அங்கீகாரம்
2016ஆம் ஆண்டில், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை 3.05/4 என்ற தரப்புள்ளிகளுடன் பல்கலைக்கழகத்திற்கு 'ஏ' தரத்தினை வழங்கியது.[6]
அருங்காட்சியகம்

இராசா இராசாராம் அருங்காட்சியக சேகரிப்பை உள்ளடக்கிய அக்ஷய குமார் மைத்ரேயா பாரம்பரிய அருங்காட்சியகம் பிப்ரவரி 1965-ல் வடக்கு வங்காளப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் இப்போது வட வங்காளத்தின் வரலாறு தொடர்பான சிற்பங்கள், நாணயங்கள், ஓவியங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் களஞ்சியமாக உள்ளது. இது ஒரு பிராந்திய அருங்காட்சியகம் மற்றும் இந்தியாவில் உள்ள சில பல்கலைக்கழக அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இது பிராந்திய ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னங்களைச் சேகரித்து, பாதுகாத்து மற்றும் ஆய்வு செய்கிறது.
Remove ads
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- சுபாசிஷ் டே, நீரியல் ஆய்வாளர் மற்றும் கல்வியாளர்
- சாரு மசூம்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்
- அப்துல் கரீம் சௌத்ரி, மேற்கு வங்காள அரசாங்கத்தின் வெகுஜன கல்வி விரிவாக்கம் மற்றும் நூலக சேவைகளுக்கான முன்னாள் அமைச்சர்
- மஹிமா சவுத்ரி, இந்திய நடிகை மற்றும் மாதிரியாளர்
- டேனி டென்சோங்பா, இந்திய நடிகர், பாடகர் மற்றும் திரைப்பட இயக்குநர்
- ஜோதி பிரகாஷ் தமாங், இந்திய உணவு தொழில்நுட்பவியலாளர், நுண்ணுயிரியலாளர்
- பார்த்தசாரதி சக்ரவர்த்தி, இந்தியச் சுற்றுச்சூழல் புவி வேதியியலாளர், முன்னாள் மூத்த விஞ்ஞானி
- பிரேம் சிங் தமாங், சிக்கிம் முதல்வர்
- சுமனா ராய், இந்திய எழுத்தாளர் மற்றும் கவிஞர்
- பீம் ஹாங் லிம்பூ, சிக்கிமின் பொதுச் சுகாதார பொறியியல் துறை அமைச்சர்
- சபீனா யெஸ்மின், இந்திய அமைச்சரவை இணை அமைச்சர்
- சோகிலா ஐயர், இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு செயலாளர்
- சிறீ ரூப மித்ரா சவுத்ரி, சமூக சேவகர், பெண்கள் உரிமை ஆர்வலர்
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads