வட்டவளை
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வட்டவளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அட்டன் நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. வட்டவளை என்பது சூழப்பட்ட தாழ்வன பகுதி எனச் சிங்கள மொழியில் பொருள்படும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டவளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கல்படை, றொசல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. வட்டவளையில் வட்டவளை, மேல் வட்டவளை என இரண்டு தொடருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. இதில் கண்டி திசையிலிருந்து பயணிக்கும் போது முதலாவதாக அமைந்துள்ள வட்டவளை தொடருந்து நிலையம் பெரியதாகும். அடுத்ததாக அமைந்துள்ள மேல் வட்டவளை நிலையம் வட்டவளை நகருக்கு அண்மையாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
Remove ads
ஆதாரம்
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ![]() | |
மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads