வண்ணாரப்பேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வண்ணாரப்பேட்டை (Washermanpet) என்பது இந்திய நகரம் சென்னையின் வடபகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். துவக்கத்தில் சென்னையின் வண்ணான் துறைகள் பல இங்கு இருந்த காரணத்தால் இப்பெயர் அமைந்தது. தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னர் இதுவே துணி வியாபார மையமாக இருந்தது. இப்பகுதி நகைக் கடைகளுக்கும், தீப்பெட்டி தொழிலுக்கும் புகழ்பெற்றது.
Remove ads
அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 30.96 மீ. உயரத்தில், (13.1320°N 80.2784°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வண்ணாரப்பேட்டை அமையப் பெற்றுள்ளது.
பெயர்க்காரணம்
வண்ணாரப்பேட்டை ஆங்கில வாணிபக் கழகத்தின் துணிமணிகளை வெளுப்பதற்கும், துவைப்பதற்கும், சாயம் போடுவதற்கும் பல சலவைத் தொழிலாளர்கள் (வண்ணார்கள்) பெத்தநாயக்கபேட்டைக்கு வடபுறத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய திறந்தவெளியும், பெருமளவு நீரும் கிடைக்காததால், கறுப்பர் பட்டினத்திற்கு (இப்போதுள்ள ஜார்ஜ் டவுன்) வடக்கில் சென்று குடியேற வேண்டியதாயிற்று. அவர்களுக்கு இந்த இடம் வசதியாக மாறிப்போய் விட்டதால், அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிவிட்டனர். அவர்கள் வாழ்ந்த பகுதி இந்தப் பகுதிக்கு வண்ணாரப்பேட்டை என்று பெயர் வந்தது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads