விசயசிம்மன்
காலச்சூரி மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசயசிம்மன் (Vijayasimha; ஆட்சி. பொ.ச.1188-1210) திரிபுரியின் காலச்சூரி வம்சத்தின் மன்னனாவான். இவனது இராச்சியம் மத்திய இந்தியாவில் (இன்றைய மத்தியப் பிரதேசம் ) உள்ள சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.
Remove ads
ஆட்சி
விசயசிம்மன் தனது தந்தை செயசிம்மனுக்குப் பிறகு காலச்சூரி மன்னரானான். இவனது தாயார் கோசலாதேவி ஆவார். இவனுக்கு, அசயசிம்மர் என்ற சகோதரனும் இருந்தான். [1]
இவனது இராச்சியத்தின் ஒரு சில பகுதிகளை ஆட்சி செய்து வந்த சல்லக்சணன், சுதந்திரமாக இருப்பதாக அறிவித்தான். இருப்பினும், கர்கரேடியில் (ரேவா மாவட்டத்தில் உள்ள நவீன கக்ரேடி) நடந்த போரில் மலையசிம்மன் என்ற மற்றொரு நிலப்பிரபு சல்லக்சணனை தோற்கடித்தான். இந்த போர் கிபி 1193 தேதியிட்ட ரேவா கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. [1] அடையாளம் தெரியாத விக்ரமன் என்ற அரசனையும் மலையசிம்மன் தோற்கடித்தான். [2]
சில முந்தைய அறிஞர்கள் விசயசிம்மன் தனது இராச்சியத்தின் வடக்குப் பகுதியை சந்தேல மன்னன் திரைலோக்யவர்மனிடம் இழந்தான். திரைலோக்யவர்மனுடனான கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள "திரைலோக்யமல்லன்" அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், பொ.ச.1197 தேதியிட்ட ஜுல்பூர் கல்வெட்டின் கண்டுபிடிப்பு இந்த அனுமானத்தை நிராகரிக்கிறது: திரைலோக்யமல்லன் என்பது விசயசிம்மனின் மகனின் பெயராகும். [2]
இவனுக்கு அசயசிம்மன் என்ற சகோதரன் இருந்தான். அவன் விசயசிம்மனின் ஆட்சியின் போது வெளியிடப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் மகாராசகுமாரன் ("பெரிய மன்னனின் மகன்") என்று குறிப்பிடப்படுகிறான். முந்தைய அறிஞர்கள் இவன் விசயசிம்மனின் மகன் என்று கருதினர். ஆனால் பொ.ச.1193 தேதியிட்ட உமரியா கல்வெட்டின் கண்டுபிடிப்பு இவன் விசயசிம்மனின் சகோதரன் என்பதைக் காட்டுகிறது.. [2]
Remove ads
கல்வெட்டுகள்
விசயசிம்மரின் ஆட்சிக் காலத்திலிருந்த குறைந்தது எட்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் காலச்சூரி சகாப்தத்தைச் சேர்ந்தவை. இந்தக் கல்வெட்டுகள் பொ.ச.1180-81 இலிருந்து 1208-09 அல்லது 1210-11 வரை இருக்கலாம். [3]
பொ.ச. 1193 தேதியிட்ட செப்புத் தகடு கல்வெட்டு, பன்னா மாவட்டத்திலுள்ள உமாரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. விசயசிம்மனின் துணை அதிகாரியான இரணகா குமாரபாலன் என்பவன் பல பிராமணர்களுக்கு மூன்று கிராமங்களை வழங்கியதை பதிவு செய்கிறது. இந்த கல்வெட்டு ஜபல்பூரில் உள்ள இராணி துர்காவதி அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது. [1]
மண்டலா மாவட்டதிலுள்ள ஜூல்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.ச.1197 தேதியிட்ட செப்புத் தகடு கல்வெட்டு, பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்த வித்யாதர-சர்மா என்ற பிராமணருக்கு ஹாதிம் என்ற கிராமத்தை வழங்கியதை பதிவு திரைலோக்யமல்லனின் பிறந்தநாளில் இந்த உதவி வழங்கப்பட்டது. கல்வெட்டு மண்டலாவில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது. [1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads