விவேக் ராமசாமி

From Wikipedia, the free encyclopedia

விவேக் ராமசாமி
Remove ads

விவேக் கணபதி ராமசாமி (Vivek Ganapathy Ramaswamy)[1][2] பிறப்பு:9 ஆகத்து 1985), ஓர் ஐக்கிய அமெரிக்காவின் தொழிலதிபரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2014இல் ரோய்வண்ட் அறிவியல்கள் எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தைத் துவக்கி நடத்தினார். பிப்ரவரி 2023இல் விவேக் ராமசாமி 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.[3][4]

விரைவான உண்மைகள் விவேக் ராமசாமி, பிறப்பு ...
Remove ads

இளமை & கல்வி

இந்து சமயத்தைச் சேர்ந்த வி. கணபதி ராமசாமி-கீதா எனும் இந்தியப் பெற்றோருக்கு, ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரத்தில் 1985 ஆகத்து 9 அன்று விவேக் பிறந்தார்.[5][6][7][8][9]தமிழ் மொழி பேசும் இவரது பெற்றோர் கேரளாவின் பாலக்காடு அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[5][10][11] இவரது தந்தை வி. கணபதி ராமசாமி, கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவரது தாய் கீதா மைசூர் மருத்துவக் கல்லூரியில் மூத்தகுடி மக்களுக்கான உளவியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[12]

இவரது பெற்றோர் கேரளாவில் சொந்த ஊரான திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்காஞ்சேரி அக்ரகாரத்திலிருந்து பாலக்காடு மாவட்டத்திற்குக் குடியேறியவர்கள்.[13][14]

கல்வி

விவேக் ராமசாமி ஒகையோவில் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படித்து வளர்ந்தார்.[15][16] 2003இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[17] பின்னர் கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிதி நிறுவனங்களில் பணிபுரிந்தார். 2011இல் முதுநிலை படிப்பை முடித்தார்.[18] 2013இல் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.[19]

Remove ads

தொழில்

Thumb
2017இல் விவேக் ராமசாமி

2014 இல் விவேக் ராமசாமி ரோய்வண்ட் அறிவியல்கள் எனும் மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தை நிறுவி பெருந்தொகை ஈட்டினார். 2017 இல் தான் நிறுவிய நிறுவனத்தை $ 175 மில்லியன் டாலர் மூலதன ஆதாயத்துடன் விற்றார்.

2023 இல் விவேக் ராமசாமி பங்குதாரர்கள் சேவை நிறுவனத்தை துவக்கினார். இதனால் விவேக் ராமசாமியின் வருமானம் $750 மில்லியன் டாலராக உயர்ந்தது.

அமெரிக்க அதிபர் வேட்பாளராக பிரச்சாரம் (2023–தற்போது வரை)

Thumb
2022 இல் விவேக் ராமசாமி

மே 2023 இல் விவேக் ராமசாமி 2024 அமெரிக்க அதிபர் தேர்லில் போட்டியிடுவதற்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் களத்தில் செயல்படுகிறார்.[20][21]

எழுதிய நூல்கள்

  • Woke, Inc.: Inside Corporate America's Social Justice Scam. New York: Hachette Book Group#Hachette Nashville-Center Street. 2021. ISBN 978-1546090786. கணினி நூலகம் 1237631944.
  • Nation of Victims: Identity Politics, the Death of Merit, and the Path Back to Excellence. New York: Hachette Book Group#Hachette Nashville-Center Street. 2022. ISBN 978-1546002963. கணினி நூலகம் 1546002960.
  • Capitalist Punishment: How Wall Street Is Using Your Money to Create a Country You Didn't Vote For. New York: Broadside Books. 2023. ISBN 978-0063337756. கணினி நூலகம் 1362864450.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads