வேட்டை (தொடர்)
சிங்கப்பூர் தமிழ் நாடகத் தொடர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேட்டை என்பது சிங்கப்பூர் நாட்டில் ஒளிபரப்பப்படும், தமிழ் நாடகத் தொடராகும். இதனை அனுராதாா கந்தராாஜு மற்றும் அப்பாஸ் அக்பர், மீடியாகார்ப் வசந்தத்திற்காக உருவாக்கினர். நான்கு பருவங்களாக உருவாக்கப்பட்ட இத்தொடர், சிங்கப்பூரின் மிகப்பிரபலமானத் தொடராகும். [1]
Remove ads
கதைக்கரு
சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் செய்யும் குற்றங்களைத் தடுக்கவும், அவர்களை ஒழுங்கு படுத்தவும் உருவாக்கப்பட்ட கற்பனையான ஒரு காவல்துறைப் பிரிவை மையமாகக் கொண்டு இயங்குகிறது வேட்டை.[2]
பருவங்கள்
முதற் பருவம்
வேட்டையின் முதற்பருவம் எழுபத்தி இரண்டு இயல்களைக் கொண்டது. மிகப் பரவலகப் பேசப்பட்ட இத்தொடரின் இறுதி மூவியல்கள் கத்தே சினிலெய்சர் ஆர்சர்டு என்ற அரங்கத்தில் திரையிடப்பட்டன. [3]
இரண்டாம் பருவம்
வேட்டை 2.O : அடுத்த தலைமுறை என்ற அடைமொழியுடன் முதல் பருவத்தின் வெற்றியைத் தொடர்ந்து எழுபத்தி மூன்று இயல்களைக் கொண்டதாக பருவம் இரண்டு வெளியானது. இப்பருவமானது ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியையும் கண்டிருந்தது.[4]
மூன்றாம் பருவம்
வேட்டை 3: இறுதித் தீர்ப்பு என்ற அடைமொழியுடன் வெளிவந்த பருவம் மூன்று, வேட்டைத் தொடரின் இறுதி பாகமாய்க் கருதப்பட்டது. எழுபத்தொரு இயல்களைக் கொண்ட இத்தொடர், மலேசியாவிலும் படமாக்கப்பட்டது. இதன் இறுதி இயல் 98 நிமிடங்கள் ஓடக்கூடியது .[5]
நான்காம் பருவம்
வேட்டை 4 : படை என்ற அடைமொழியுடன் நான்காம் பருவம் ஒளிபரப்பப்பட்டது. இப்பருவமானது, மற்ற மூன்று பருவங்களைக் காட்டிலும் புதிய கதாப்பாத்திரங்களைக் கொண்டிருந்தது.இதன் இறுதி இயல் 52 நிமிடங்கள் ஓடக்கூடியது[6]
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
Remove ads
விருதுகள்
2011இல், இந்தத் தொடர் மிகவும் பிரபலமான தொடருக்கான பிரதான விழா விருதை வென்றது, ஷபீர் சிறந்த நடிகருக்கான விருதையும், குணாலன் மிகவும் பிரபலமான ஆண் ஆளுமை விருதினையும் வென்றார், காயத்ரி மிகவும் பிரபலமான பெண் ஆளுமை விருதினை வென்றார்.[7]
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads