ஹோம்ஸ் ஆளுநரகம்

சிரியாவின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

ஹோம்ஸ் ஆளுநரகம்map
Remove ads

ஹோம்ஸ் கவர்னரேட் (Homs Governorate, அரபி: مُحافظة حمص ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது மத்திய சிரியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 40,940 km2 (15,807 sq mi) [1] முதல் 42,223 km2 (16,302 sq mi) [2] வரை என பல்வேறு தரவுகளில் வேறுபடுகிறது. இது புவியியல் ரீதியாக சிரியாவின் மிகப்பெரிய ஆளுநரகமாகும். ஹோம்ஸ் கவர்னரேட்டின் மக்கள் தொகை 1,763,000 (2010 மதிப்பீடு) ஆகும். ஹோம்ஸ் ஆளுநரகம் 6 நிர்வாக மாவட்டங்களாக ( மந்திகா ) பிரிக்கப்பட்டுள்ளது. ஹோம்ஸ் நகரம் ஒரு தனி மாவட்டமாக உள்ளது. ஹோம்ஸ் மாவட்டத்தின் தலைநகரம் ஹோம்ஸ் ஆகும். இதன் ஆளுநர் தலால் அல் பராஸி என்பவராவார். [3]

விரைவான உண்மைகள் ஹோம்ஸ் கவர்னரேட் مُحافظة حمص, நாடு ...

உதுமானிய சிரியாவின் ஒரு பகுதியாக ஹோம்ஸ் ஆளுநரகம் இருந்தது. இது ஹோம்ஸின் சஞ்சாக் என்றும் அழைக்கப்பட்டது.

Remove ads

மாவட்டங்கள்

Thumb
டக்கலாக் மாவட்டத்தில் அல்-ஹுவாஷ் நகரம்

ஆளுநரகம் பத்து மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 25 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:

  • 'ஹோம்ஸ் மாவட்டம்' (10 துணை மாவட்டங்கள்)
    • ஹோம்ஸ் துணை மாவட்டம்
    • கிர்பெட் டின் நூர் துணை மாவட்டம்
    • அய்ன் அல்-நைசர் துணை மாவட்டம்
    • பர்கியூஸ் துணை மாவட்டம்
    • அல்-ரிக்காமா துணை மாவட்டம்
    • .[அல்-குவாரியாட்யான்|அல்-குவாரியாட்யான் துணை மாவட்டம்]]
    • மஹின் துணை மாவட்டம்
    • ஹிஸ்யா துணை மாவட்டம்
    • சதாத் துணை மாவட்டம்
    • ஷின் துணை மாவட்டம்
  • அல்-முகரம் மாவட்டம் (2 துணை மாவட்டங்கள்)
    • அல்-முகரம் துணை மாவட்டம்
    • ஜுப் அல்-ஜர்ரா துணை மாவட்டம்
  • அல்-ரஸ்தான் மாவட்டம் (2 துணை மாவட்டங்கள்)
    • அர்-ரஸ்தான் துணை மாவட்டம்
    • தல்பிசே துணை மாவட்டம்

வார்ப்புரு:கோல்-பிரேக்

  • அல்-குசெய்ர் மாவட்டம் (2 துணை மாவட்டங்கள்)
    • அல்-குசெய்ர் துணை மாவட்டம்
    • அல்-ஹோஸ் துணை மாவட்டம்
  • தத்மூர் மாவட்டம் (2 துணை மாவட்டங்கள்)
    • தத்மூர் துணை மாவட்டம்
    • அல்-சுக்னா துணை மாவட்டம்
  • டால்டூ மாவட்டம் (3 துணை மாவட்டங்கள்) *
    • டால்டூ துணை மாவட்டம்
    • காஃப்ர் லஹா துணை மாவட்டம்
    • அல்-கபு துணை மாவட்டம்
  • டக்கலாக் மாவட்டம் (4 துணை மாவட்டங்கள்)
    • டக்கலாக் துணை மாவட்டம்
    • ஹதிதா துணை மாவட்டம்
    • அல்-நசிரா துணை மாவட்டம்
    • அல்-ஹவாஷ் துணை மாவட்டம்

* - 2010 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம், முன்பு ஹோம்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தது

Remove ads

மக்கள் வகைப்பாடு

அல்-முகர்ரம் மாவட்டத்தில் பெரும்பாலும் அலவைட்டுகள் வசிக்கின்றனர். தால்டோ, டக்கலாக், ஹோம்ஸ் மற்றும் அல்-குசெய்ர் மாவட்டங்களில் அலவைட், சுன்னி முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்கள் போன்றோர் கலந்து வாழ்கின்றனர். அல்-குசெய்ர் மாவட்டத்தில் ஏராளமான ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads