From Wikipedia, the free encyclopedia
கால்மீக்கியா அல்லது கால்மீக்கியா குடியரசு (Republic of Kalmykia, உருசியம்: Респу́блика Калмы́кия) உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்றாகும். இதன் தலைநகரம் எலிஸ்தா ஆகும்.[14]
கால்மீக்கியா குடியரசு Republic of Kalmykia | |
---|---|
Республика Калмыкия | |
Other transcription(s) | |
• கல்மிக்கு | Хальмг Таңһч |
பண்: "Khalmg Tanghchin chastr"[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | தெற்கு[2] |
பொருளாதாரப் பகுதி | வோல்கா[3] |
தலைநகர் | எலிஸ்தா[4] |
அரசு | |
• நிர்வாகம் | கால்மீக்கியா நாடாளு மன்றம்[5] |
• தலைமை[6] | அலெக்சி ஓர்லொவ்[7] |
பரப்பளவு | |
• மொத்தம் | 76,100 km2 (29,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 41வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9] | |
• மொத்தம் | 2,89,481 |
• மதிப்பீடு (2018)[10] | 2,75,413 (−4.9%) |
• தரவரிசை | 78வது |
• அடர்த்தி | 3.8/km2 (9.9/sq mi) |
• நகர்ப்புறம் | 44.1% |
• நாட்டுப்புறம் | 55.9% |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [11]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KL |
அனுமதி இலக்கத்தகடு | 08 |
OKTMO ஐடி | 85000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்;[12] கல்மிக்கு[13] |
இணையதளம் | http://kalm.ru |
ஐரோப்பிய கண்டத்தில் மற்றும் உருசியக் கூட்டமைப்பின் மேற்கு பகுதியில் வச்சிரயான பௌத்தப் பிரிவான, திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் ஒரே நாடு கால்மீக்கியா ஆகும்.[15][16][17] 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கால்மீக்கியா குடியரசின் மக்கட்தொகை 289,481 ஆகும்.[9]கால்மிக் மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது ஒரு பிரபலமான பன்னாட்டு சதுரங்க மையமாகும். காரணம் இதன் முன்னாள் அதிபரான 'கிர்சன் லையும்சின்லோவ்' பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு அமைப்பின் தலைவராவார்.
ஐரோப்பிய ருசியப் பகுதியின் தென் மேற்கில் அமைந்துள்ளது. இதன் தென் கிழக்கில் காஸ்பியன் கடல் உள்ளது. கிழக்கு கால்மிகியா நாட்டின் வழியாக வால்கா ஆற்றின் ஒரு பகுதி பாய்கிறது. இதன் பரப்பளவு 76,100 சதுர கிலோ மீட்டராகும்.
நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு கால்மிகியாவின் இயற்கை வளங்கள் ஆகும்.
கோடைகாலத்தில் 24 பாகை செல்சியஸ் வெயிலும், குளிர்காலத்தில் பூஜ்ஜியம் 5 பாகை செல்சியஸ் குளிரும் காணப்படுகிறது. கால்மிகியாவின் ஆண்டு சராசரி மழை அளவு, கிழக்குப் பகுதியில் 170 மில்லி மீட்டரும், மேற்கு பகுதியில் 400 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.
கால்மிகியாக் குடியரசில், 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கல்மைக் மக்கள் 57.4%, ருசியர்கள் 30.2%, தார்ஜின் மக்கள் 2.7%, செசன்யர்கள் 1.2%, கசக்ஸ்தானியர்கள் 1.7%, துருக்கியர்கள் 1.3%, காசேசியர்க்ள் 0.8%, உக்ரையனியர்கள் 0.5%, ஜெர்மனியர்கள் 0.4% உள்ளனர்.
திபெத்திய பௌத்த சமயத்தைப் பிற்றுபவர்கள் கால்மிகியா குடியரசில் பெரும்பான்மையினராக உள்ளனர். 2012ஆண்டு கணக்கெடுப்பின்படி, 37.6% பௌத்தம், 18% ருசியக் கிறித்தவம், 4% இசுலாம், 3% கால்மைக்கியா சாமானிசம், 1% கத்தோலிக்கம் மற்றும் புராட்டஸ்டண்டுகள் அல்லாத கிறித்தவர்கள், 1% கிழக்கு கிறித்தவம்,0.4% இந்து, 9% சமயமில்லாதவர்கள், 13% நாத்திகர்கள், 13% ஆன்மிகவாதிகள் ஆனால் சமயம் சாராதவர்கள் உள்ளனர்.
ருசிய அதிபரே கால்மிகியா குடியரசின் தலைவர் வேட்பாளரை தேந்தெடுப்பார்.
வேளாண் தொழில் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
நாட்டின் வரவு செலவு ஆண்டிற்கு (பட்ஜெட்) தொகை 100 மில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும்.
தலைநகர் எலிஸ்தாவில் கல்மைக் அரசு பல்கலைக்கழகம் பெரிய உயர்கல்வி நிலையம் அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.