கோலா கங்சார்

From Wikipedia, the free encyclopedia

கோலா கங்சார்map

கோலா கங்சார் (மலாய்: Kuala Kangsar; சீனம்: 瓜拉江沙) மலேசியா பேராக் மாநிலத்தில் உள்ள அரச நகரம். இங்கேதான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் எச். என். ரிட்லி முதல் ரப்பர் கன்றை நட்டு உலக ரப்பர் ஏற்றுமதியில் மலேசியாவை முதல் நிலைக்கு கொண்டு வந்தார். இந்த நகரத்தின் மக்கள் தொகை 39,331.[1]

விரைவான உண்மைகள் கோலா கங்சார் Kuala Kangsar பேராக், நாடு ...
கோலா கங்சார்
Kuala Kangsar
பேராக்
Thumb
Thumb
சின்னம்
குறிக்கோளுரை: தரமான வாழ்க்கை வளர்ப்போம்
Thumb
Thumb
கோலா கங்சார்
      கோலாகங்சார்
ஆள்கூறுகள்: 4°46′N 100°56′E
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்கோலாகங்சார்
பரப்பளவு
  மொத்தம்204.94 km2 (79.13 sq mi)
மக்கள்தொகை
 (2010)
  மொத்தம்39,331
  அடர்த்தி752/km2 (1,950/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
31050
தொலைபேசி எண்+605-77x
போக்குவரத்துப் பதிவெண்கள்C
இணையதளம்www.mpkkpk.gov.my
மூடு

கோலா கங்சார் நகரம் கங்சார் நதிக் கரையோரம் உருவாக்கப் பட்டது. இந்த ஆறு பேராக் ஆற்றுடன் கலக்கிறது. 1877–1887 ஆண்டுகளில் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்தவர் சுல்தான் யூசுப் சரிபுடின் முசபர் ஷா. இந்தச் சுல்தான் தான் கோலாகங்சார் அரச நகரத்தை உருவாக்கினார்.

வரலாறு

Thumb
இஸ்தானா கெனாங்கான் பழைய அரண்மனை.

பொதுவாக, மலாய் அரசர்கள் உயரமான இடங்களில் தங்களின் நகரங்களை உருவாக்கி வந்துள்ளனர். ஆனால், சுல்தான் யூசுப் ஒரு நதிக் கரையோரம் தன் நகரத்தை உருவாக்கினார். அதற்கு ஸ்ரீ சாயோங் என பெயர் சூட்டினார்.

பேராக் மாநிலக் காடுகளில் வருடம் முழுமையும் மழை பெய்யும். தவிர பருவமழைக் காலங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 1926 ஆம் ஆண்டு கடும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் கோலாகங்சார் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

இசுகந்திரியா அரண்மனை

அதில் பேராக் சுல்தானின் அரண்மனை பெரிதும் பாதிக்கப் பட்டது. அதனால் அந்த அரண்மனை சற்று உயரமான இடத்திற்கு மாற்றப் பட்டது. அதற்கு இசுகந்திரியா அரண்மனை என பெயர் சூட்டப்பட்டது.

பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாகத் தங்கும் இடம் கோலா கங்சார். 18ஆம் நூற்றாண்டில் இருந்து சுல்தான்கள் இந்த நகரில் தங்கி தான் ஆட்சி செய்து வந்தனர். பிரித்தானியர்கள் பேராக் மாநிலத்தை நிர்வாகம் செய்யும் போது கூட கோலாகங்சார் நகரம் தான் அவர்களின் நிர்வாகத் தளமாகவும் விளங்கியது.

பேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய ஆளுநர் ஜேம்ஸ் பர்ச் 1874 ஆம் ஆண்டு கோலா கங்சார் நகரத்தில் இருந்து நிர்வாகம் செய்து வந்தார். இவர் 1875 நவம்பர் 2-ஆம் தேதி பாசீர் சாலாக் எனும் இடத்தில் மலாய்த் தீவிரவாதிகளால் கொலை செய்யப் பட்டார்.

சுல்தான்களின் முதல் மாநாடு

1897-இல் மலேசிய ஆட்சியாளர்களின் முதல் மாநாடு இங்கு நடைபெற்றது. 1890-களில் ஈப்போ, தைப்பிங் நகரங்களில் ஈய உற்பத்தி வளர்ச்சி கண்டதும் கோலா கங்சார் நகரமும் புகழ் பெறத் தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரை கோலா கங்சார் அழகு வாய்ந்த ஓர் அரச நகரமாகப் புகழ் பெற்று வளர்ச்சி கண்டு வருகிறது.

கோலா கங்சார் நகரத்தில் தான் மலேசியாவில் முதன் முதலில் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் எச். என். ரிட்லி என்பவர் முதல் ரப்பர் கன்றை நட்டார்.

எச். என். ரிட்லி

உலக ரப்பர் உற்பத்தி ஏற்றுமதியில் மலேசியாவை முதன்மை படுத்தி முதல் நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அவர் நட்ட அந்த ரப்பர் மரம் வளர்ந்து இன்று வரை கோலாகங்சார் நகரில் காட்சி அளிக்கின்றது. கோலாகங்சார் நகரத்திற்கு வருபவர்கள் அந்த மரத்தைப் பார்க்காமல் செல்வது இல்லை.

இந்த ரப்பர் மரம் மலேசியாவின் ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. பார்க்க வருபவர்கள் அதைத் தொட்டுத் தடவிப் பார்ப்பதைத் தடுக்க மரத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப் பட்டுள்ளது.

மலேசியாவின் இந்த முதல் ரப்பர் மரத்திற்கு இப்போது வயது 100க்கும் மேல் ஆகிறது.

மக்களவை உறுப்பினர்

மலேசிய நாடாளுமன்றம்

பேராக் மாநிலச் சட்டமன்றம்

  • N.34 புக்கிட் சாண்டான் - வான் முகமட் காயிரில் அனுவர் ( பாரிசான் நேஷனல்)
  • N.35 மானோங் - டத்தோ ரம்லி ஜஹாரி ( பாரிசான் நேஷனல்)

கோலா கங்சார் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள்

  • காந்தி நினைவுப்பள்ளி, கோலாகங்சார் ms:Sekolah Jenis Kebangsaan (T) Gandhi Memorial
  • சுங்கை பூயோங் தமிழ்ப்பள்ளி, சாவுக், கோலாகங்சார்ms:Sekolah Jenis Kebangsaan (T) Ladang Sungai Biong
  • காத்தி தமிழ்ப்பள்ளி, காத்தி, சாவுக், கோலாகங்சார்ms:Sekolah Jenis Kebangsaan (T) Ladang Kati
  • காப்பிஸ் தமிழ்ப்பள்ளி, பாடாங் ரெங்காஸ், கோலாகங்சார்
  • பேராக் ரிவர் தமிழ்ப்பள்ளி, பாடாங் ரெங்காஸ், கோலாகங்சார்
  • எங்கோர் தமிழ்ப்பள்ளி, எங்கோர், கோலாகங்சார்
  • மகாத்மா காந்தி கலாசாலை, சுங்கை சிப்புட்
  • சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட்
  • துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட் தோட்டம், சுங்கை சிப்புட்
  • எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட்
  • சுங்கை ரெய்லா தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட்

பார்க்க வேண்டிய இடங்கள்

கோலா கங்சார் ஓர் அமைதியான நகரம். மற்ற மலேசிய நகரங்களைப் போன்று பரபரப்பு இல்லாத ஓர் அழகான நகரம். உணவுப் பொருட்களின் விலையும் குறைவு. மகிழ்ச்சியுடன் பொழுது போக்க விரும்புகிறவர்கள் இந்த நகரத்திற்கு வருகின்றனர்.

  • உபைதுல்லா பள்ளிவாசல்
  • அரச புனித சமாதி
  • இசுதானா கெனாங்கான் (பழைய அரண்மனை)
  • இசுதானா இஸ்கந்திரியா (அரச அரண்மனை)
  • விக்டோரியா பாலம் (1900ல் கட்டப் பட்டது)
  • இசுகந்தர் பாலம்
  • அப்துல் ஜாலில் பாலம்
  • கிரிசு நினைவாலயம்
  • புக்கிட் சாண்டான்
  • முதல் இரப்பர் மரம்
  • கோலாகங்சார் மலாய்க் கல்லூரி
  • கிளிபர் ட் ஆங்கிலப் பள்ளி
  • எங்கோர் கைவினை மையம்

மேற்கோள்கள்

சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.