கோலாகங்சார் மக்களவைத் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

கோலாகங்சார் மக்களவைத் தொகுதி
Remove ads

கோலாகங்சார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Kangsar; ஆங்கிலம்: Kuala Kangsar Federal Constituency; சீனம்: 瓜拉江沙 联邦选) என்பது மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P067) ஆகும்.[7]

விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர்களின் எண்ணிக்கை ...




Thumb

2022-இல் கோலாகங்சார் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (21.0%)
  மலாயர் (71.6%)
  இதர இனத்தவர் (1.0%)

கோலாகங்சார் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து கோலாகங்சார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

Remove ads

கோலாகங்சார்

கோலாகங்சார் நகரம் என்பது பேராக் மாநிலத்தின் அரச நகரம் ஆகும். முதன்முதலில் இந்த நகரம் கங்சார் ஆற்றுக் கரையோரம் உருவாக்கப் பட்டது. கங்சார் ஆறு பேராக் ஆற்றுடன் கலக்கிறது.

கோலாகங்சார் நகரத்தில் ஆண்டு முழுவதும்ம் மழை பெய்யும். பருவமழைக் காலங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 1926-ஆம் ஆண்டு கடும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் கோலாகங்சார் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

எச். என். ரிட்லி

18-ஆம் நூற்றாண்டில் இருந்து பேராக் சுல்தான்கள் இந்த நகரில் தங்கி தான் ஆட்சி செய்து வந்தனர். பிரித்தானியர் பேராக் மாநிலத்தை நிர்வாகம் செய்யும் போது கூட கோலாகங்சார் நகரம் தான் அவர்களின் நிர்வாகத் தளமாக விளங்கியது.

கோலாகங்சார் நகரத்தில் தான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் எச். என். ரிட்லி என்பவர் முதல் ரப்பர் கன்றை நட்டார்.

Remove ads

கோலாகங்சார் மக்களவைத் தொகுதி

மேலதிகத் தகவல்கள் கோலாகங்சார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022), மக்களவை ...
Remove ads

கோலாகங்சார் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

மேலதிகத் தகவல்கள் பொது, வாக்குகள் ...

கோலாகங்சார் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads