ஜொகூர் மாநிலத்தில் ஒரு மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia
சொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); (சுருக்கம்: MBJB) என்பது மலேசியா, சொகூர், மாநிலத்தின் சொகூர் பாரு மாவட்டம்; சொகூர் பாரு மாநகரம்; இசுகந்தர் மலேசியாவின் சில பகுதிகள்; ஆகியவற்றை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[1]
சொகூர் பாரு மாநகராட்சி Johor Bahru City Council Majlis Bandaraya Johor Bahru | |
---|---|
சொகூர் பாரு மாநகராட்சி சின்னம் | |
சொகூர் பாரு கொடி | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் (ஜொகூர் பாரு) |
வரலாறு | |
முன்பு | சொகூர் பாரு நகராட்சி |
தலைமை | |
நகர முதல்வர் | முகமது நூரசாம் ஒசுமான் Mohd Noorazam Haji Osman 15 ஆகத்து 2021 |
தலைமைச் செயலாளர் | மிசுவான் யூசோப் Miswan Yunus 15 ஆகத்து 2021 |
கட்டமைப்பு | |
அரசியல் குழுக்கள் | மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
|
கூடும் இடம் | |
சொகூர் பாரு மாநகராட்சி தலைமையகம் Bangunan MBJB, Bukit Senyum, Jalan Medini Sentral 9, Bandar Medini Iskandar, இசுகந்தர் புத்திரி, சொகூர் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
1994 சனவரி 1-ஆம் தேதி சொகூர் பாரு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு சொகூர் பாரு மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், சொகூர் பாரு மாநகரத்தில் உள்ளது.
இந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[1]
# | தலைவர் | சேவைக் காலம் |
---|---|---|
1. | துங்கு அகமட் இப்ராகிம் | 1977-1984 |
2. | அமினா அசிசா மரியம் | 1984-1984 |
3. | ஆசாரி ரபேல் | 1984-1993 |
4. | அசிம் யாகயா | 1994 – 2000 |
5. | சொகாரி சுராட்மான் | 2000 – 2003 [3] |
5. | வாகிட் டாலான் | 2003 – 2007 [4] |
6. | அப்துல் லத்தீப் யூசுப் | 2007 - 2007 |
7. | நைம் நசீர் | 2007 – 2009 |
8. | முகமது ஜாபர் அவாங் | 2009 - 2011 |
p. | புர்கான் அமீன் | 2011 - 2013 |
10. | இசுமாயில் கரீம் | 2013 - 2014 |
11. | அப்துல் ரகுமான் முகம்மது தவாம் | 2014 - 2015 |
12. | ரகீம் பின் நின் | 2015 - 2017 |
13. | அம்ரான் பின் ரகுமான் | 2017 - 2019 |
14. | அசாரி பின் தாவூத் | 2019–2021 |
15. | முகமது நூரசாம் ஒசுமான் | 2021 – [5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.