From Wikipedia, the free encyclopedia
திருகோணமலை நகரசபை (Trincomalee Urban Council, திருகோணமலை நகராட்சி மன்றம்) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.
18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி | 10,940 | 69.58% | 9 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 2,542 | 16.17% | 2 | |
சிறீலங்கா சுதந்திரக் கட்சி | 2,135 | 13.58% | 1 | |
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 106 | 0.67% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 15,723 | 100.00% | 12 | |
செல்லாத வாக்குகள் | 77 | |||
மொத்த வாக்குகள் | 15,800 | |||
பதிவில் உள்ள வாக்காளர்கள் | 24,529 | |||
வாக்களித்தோர் | 64.41% |
30 மார்ச் 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 16,368 | 75.06% | 10 | |
சுயேச்சை | 4,286 | 19.65% | 2 | |
மக்கள் விடுதலை முன்னணி | 895 | 4.10% | 0 | |
ஈழ மக்கள் சனநாயகக் கட்சி | 259 | 1.19% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 21,808 | 100.00% | 12 | |
செல்லாத வாக்குகள் | 935 | |||
மொத்த வாக்குகள் | 22,743 | |||
பதிவில் உள்ள வாக்காளர்கள் | 36,961 | |||
வாக்களித்தோர் | 61.53% |
17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[3]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 11,601 | 59.43% | 8 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 4,137 | 21.19% | 2 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 2,044 | 10.47% | 1 | |
மக்கள் விடுதலை முன்னணி | 519 | 2.66% | 1 | |
அகில இலங்கைத் தமிழர் ஐக்கிய முன்னணி | 463 | 2.37% | 0 | |
சுயேச்சை 1 | 419 | 2.15% | 0 | |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 327 | 1.68% | 0 | |
சுயேச்சை 2 | 10 | 0.05% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 19,520 | 100.00% | 12 | |
செல்லாத வாக்குகள் | 560 | |||
மொத்த வாக்குகள் | 20,080 | |||
பதிவில் உள்ள வாக்காளர்கள் | 31,927 | |||
வாக்களித்தோர் | 62.89% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.