நகரசபை (இலங்கை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இலங்கையில், நகரசபை என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பு ஆகும். தரநிலை வரிசையில் மாநகரசபைக்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் உள்ளது. இலங்கையில், நகரசபைச் சட்டத்தின் அடிப்படையில் நகரசபைகள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. பிரித்தானியர் ஆட்சியின்போது, 1939 ஆம் ஆண்டில் முதன்முதலில் நகரசபைகள் உருவாக்கப்பட்டன. தற்போது இலங்கையில் உள்ள நகரசபைகளின் எண்ணிக்கை 37 ஆகும்.

கடமைகளும், அதிகாரமும்

நகரசபைகளின், அதிகாரம், கடமைகள் தொடர்பாக நகரசபைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நகரசபையொன்றின் எல்லைக்கு உட்பட்ட, பூங்காக்கள், திறந்த வெளிகள், தோட்டங்கள், கால்வாய்கள், பொதுச் சந்தைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன நகரசபைக்குச் சொந்தமானவை.

நகரசபையின் அதிகாரத்தின் கீழ்வருகின்ற தெருக்கள், ஒழுங்கைகள் முதலியவற்றைத் துப்புரவு செய்து பேணுதல், திட்டமிடல், தெருக்களை அகலமாக்கல், திறந்த வெளிகளுக்கு இடங்களை ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளின்மூலம் நகரின் வளர்ச்சியை ஊக்குவித்தல், பொது வசதிகளை நிறுவிப் பேணுதல், பொதுச் சுகாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான வசதிகளை மேம்படுத்தல் முதலியவை நகரசபையின் கடமைகளாக இருக்கின்றன.

Remove ads

அமைப்பு

நகரசபைகளுக்கு உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். நகரசபைகளில் தலைமை நிறைவேற்று அதிகாரி, அதன் தலைவர் எனப்படுகிறார். இவரும் துணைத் தலைவரும்கூட நேரடியாக மக்களாலேயே இன்று தெரிவு செய்யப்படுகின்றனர்.

மாகாண / மாவட்ட அடிப்படையில் நகரசபைகள்

மேலதிகத் தகவல்கள் மாகாணம், மாவட்டம் /எண்ணிக்கை ...

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads