கிண்ணியா நகரசபை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிண்ணியா நகரசபை (Kinniya Urban Council, கிண்ணியா நகராட்சி மன்றம்) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
Remove ads
வட்டாரங்கள்
கிண்ணியா நகரசபைக்கு பின்வரும் 8 வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:[3]
- பெரியாத்துமுனை
- கிண்ணியா
- சின்ன கிண்ணியா
- மாஞ்சோலைச்சேனை
- மாஞ்சோலை
- அண்ணல்நகர்
- பைசால்நகர்
- ஆலங்கேணி
தேர்தல் முடிவுகள்
2006 உள்ளூராட்சித் தேர்தல்கள்
30 மார்ச் 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]
2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்
17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்
2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
கிண்ணியா நகரசபைக்குத் தலைவராக சாகுல் அமீது முகம்மது நலீம் (ஐதேக), அயூப் துவான் சப்ரீன் (முகா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3]
2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்
2025 மே 6 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[6] 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads