From Wikipedia, the free encyclopedia
தெற்கு பாகா கலிபோர்னியா (பாகா கலிபோர்னியா சுர், Baja California Sur, /ˈbaxa kaliˈfornja sur/ ), அல்லது "கீழுள்ள கலிபோர்னியாவின் தெற்கு", அலுவல்முறையில் கட்டற்றதும் இறையாண்மையுடையதுமான தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம் (எசுப்பானியம்: Estado Libre y Soberano de Baja California Sur)எனப்படுவது மக்கள்தொகைப்படி மெக்சிக்கோ நாட்டின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமாகும். 32 மாநிலங்கள் உள்ள மெக்சிக்கோ நாட்டின் 31வது மாநிலமாக அக்டோபர் 8, 1974இல் இணைந்தது. அதற்கு முன்னதாக இப்பகுதி பாகா கலிபோர்னியாவின் தெற்கு ஆள்புலம் என அழைக்கப்பட்டு வந்தது. பாகா கலிபோர்னியா மூவலந்தீவின் தென்பகுதியில் 73,475 km2 (28,369 sq mi)பரப்பில் அமைந்துள்ள இந்த மாநிலம் மெக்சிக்கோவின் நிலப்பகுதியில் 3.57% ஆக உள்ளது. இதன் வடக்கில் பாகா கலிபோர்னியாவும் மேற்கில் அமைதிப் பெருங்கடலும், கிழக்கில் கலிபோர்னியா வளைகுடாவும் அமைந்துள்ளன. கலிபோர்னியா வளைகுடாக் கடல்கடந்த எல்லைகளை கிழக்கில் சோனோரா மற்றும் சினலோவா மாநிலங்களுடன் கொண்டுள்ளது.
தெற்கு பாகா கலிபோர்னியா Baja California Sur | |
---|---|
மாநிலம் | |
Estado Libre y Soberano deBaja California Sur | |
அடைபெயர்(கள்): El Acuario Del Mundo(உலகின் மீன் காட்சியகம்) | |
பண்: கான்டோ அ பாகா கலிபோர்னியா | |
மெக்சிக்கோவில் தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம் | |
நாடு | மெக்சிக்கோ |
Capital | La Paz |
Municipalities | 5 |
Largest City | La Paz |
Admission | October 8, 1974[1] |
Order | 31st |
அரசு | |
• Governor | Marcos Covarrubias Villaseñor |
• Senators[2] | Francisco J. Obregón Josefina Cota Luis Coppola Joffroy |
• Deputies[3] | Federal Deputies |
பரப்பளவு | |
• மொத்தம் | 73,909 km2 (28,536 sq mi) |
Ranked 9th | |
உயர் புள்ளி | 2,080 m (6,820 ft) |
மக்கள்தொகை (2012)[6] | |
• மொத்தம் | 6,91,161 |
• தரவரிசை | 31st |
• அடர்த்தி | 9.4/km2 (24/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 32nd |
இனம் | Sudcaliforniano (a) |
நேர வலயம் | ஒசநே-7 (MST) |
• கோடை (பசேநே) | ஒசநே-6 (MDT) |
Postal code | 23 |
Area code | Area codes |
ஐஎசுஓ 3166 குறியீடு | MX-BCS |
HDI | 0.7851 Very High Ranked 3rd |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | US$ 3,967,628.2 thousands or US$ 3.968 billion [a] |
இணையதளம் | Official Web Site |
^ a. The state's GDP was 50,785,641 thousands of pesos in 2006,[7] amount corresponding to 3,967,628.2 thousands of dollars, being a dollar worth 12,80 pesos (value of June 3, 2010).[8] |
As of 2010[update]கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 637,026 ஆக இருந்தது. இதன் மிகப் பெரிய நகரமும் தலைநகருமாக லா பாஸ் உள்ளது.இது ஓர் சுற்றுலாத் தலமாகவும் வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகிறது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க லோரெட்டோ நகரம் மூன்று கலிபோர்னியாக்களுக்கும் (தெற்கு பாகா கலிபோர்னியா, பாகா கலிபோர்னியா, மற்றும் கலிபோர்னியா) முதல் தலைநகரமாக இருந்துள்ளது. அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் வடிவமைத்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் உள்ள சான்ட்டா ரோசாலியா நகரமும் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.