தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (National Assessment and Accreditation Council, NAAC) அல்லது என்ஏஏசி இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
राष्ट्रीय मूल्यांकन एवं प्रत्यायन परिषद
துறை மேலோட்டம்
அமைப்பு1994
ஆட்சி எல்லைஇந்திய அரசு அமைப்பு
தலைமையகம்பெங்களூரு
அமைப்பு தலைமைகள்
  • முனைவர் எம். ஜெகதீசு குமார், தலைவர்
  • பேரா. தீரேந்திர பால் சிங், தலைவர்
  • முனைவர் எஸ். சி. சர்மா[1], இயக்குநர்
வலைத்தளம்www.naac.gov.in
மூடு

வரலாறு

1986இல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கைப் பரிந்துரைக்கேற்ப 1994ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வியின் தரக் குறைபாடுகளை களைவதாகும். 1992ஆம் ஆண்டில் செயலாக்கத் திட்டம் வடிக்கப்பட்டு தனியதிகாரம் கொண்ட தேசிய தரவரிசைப்படுத்தும் அமைப்பொன்றை நிறுவ தொலைநோக்கு திட்டம் தீட்டப்பட்டது. [2] இதன்படி, என்ஏஏசி 1994ஆம் ஆண்டு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

தரச்சான்று முறைமை

என்ஏஏசியிடமிருந்து தரச்சான்று பெறுவது மூன்றுநிலை செயல்பாடாகும். முதல்நிலையில் தரப்படுத்தப்படும் நிறுவனம் தயார்படுத்திக்கொண்டு சுய ஆய்வு அறிக்கையை தருவதாகும். இதனைப் பதிப்பித்தபிறகு நேரடியாக இணைநிலை அணியொன்று சுய அறிக்கைப்படி உள்ளதா என ஆய்்ந்து பரிந்துரை அளித்தல் இரண்டாம்நிலை ஆகும். மூன்றாம் நிலையில் என்ஏஏசியின் செயற்குழு இறுதி முடிவெடுப்பதாகும்.

தர நிலை

தர ஆய்வு முடிவில் உயர் கல்வி நிறுவனங்கள் ஆங்கில் எழுத்தின் அடிப்படையில் 4 தரப்புள்ளிகளுக்கு நிறுவனங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகின்றன.[3]

மேலதிகத் தகவல்கள் நிறுவன கூடுதல் தரப்புள்ளிகள், எழுத்து வகைப்பாடு ...
நிறுவன கூடுதல் தரப்புள்ளிகள் எழுத்து வகைப்பாடு செயல்பாடு
3.51 – 4.00 A++ தரம் பெற்றது
3.26 – 3.50 A+ தரம் பெற்றது
3.01 – 3.25 A தரம் பெற்றது
2.76 – 3.00 B++ தரம் பெற்றது
2.51 – 2.75 B+ தரம் பெற்றது
2.01 – 2.50 B தரம் பெற்றது
1.51 – 2.00 C தரம் பெற்றது
≤ 1.50 D தரம் பெறவில்லை
மூடு

அங்கீகாராம்

சூன் 2023 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், 820 பல்கலைக்கழகங்களும் 15501 கல்லூரிகளும் இந்த அவையினால் அங்கீகாரம் பெற்றுள்ளன.[4]

முடிவுகள்

11 மார்ச் 2020 முதல் செல்லுபடியாகும் அங்கீகாரத்துடன் கூடிய உயர்கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பட்டியலை தேமதஅ வெளியிட்டது.[5]

மேலதிகத் தகவல்கள் பல்கலைக்கழகம், மாநிலம் ...
தரச்சான்று பெற்ற முதன்மை நிறுவனங்கள் (பல்கலைக்கழகம்)
பல்கலைக்கழகம் மாநிலம் தரப்புள்ளி தர நிலை முடிவுறும் காலம்
டாட்டா சமூக அறிவியல் கழகம்மகாராட்டிரா3.8918/02/2023
லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம்மத்தியப் பிரதேசம்3.7927/03/2022
இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம்மகாராட்டிரா3.7726/11/2022
அமிர்த விஸ்வ வித்யாபீடம்தமிழ்நாடு3.7016/08/2028
இந்திய அறிவியல் கழகம்கருநாடகம்3.6725/09/2023
இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்மேற்கு வங்காளம்3.6627/03/2024
மும்பை பல்கலைக்கழகம்மகாராட்டிரா3.6527/03/2024
அழகப்பா பல்கலைக்கழகம்தமிழ்நாடு3.6401/05/2024
பனஸ்தலி வித்யாபித்இராசத்தான்3.6310/03/2022
ஜாமியா மில்லியா இஸ்லாமியாதில்லி3.6113/12/2026
ஆந்திரப் பல்கலைக்கழகம்ஆந்திரப் பிரதேசம்3.618/02/2023
சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம்மகாராட்டிரா3.621/02/2024
சென்னைப் பல்கலைக்கழகம்தமிழ்நாடு3.5921/08/2028
மூடு
மேலதிகத் தகவல்கள் கல்லூரிகள், மாநிலம் ...
தரச்சான்று பெற்ற முதன்மை கல்லூரிகள்
கல்லூரிகள் மாநிலம் தரப்புள்ளி தர நிலை முடிவுறும் காலம்
அரசு மொகிந்திரா கல்லூரிபஞ்சாப்3.8618/02/2021
பி. எம். எஸ். பொறியியல் கல்லூரிகர்நாடகா3.8327/03/2024
சுபோத் கல்லூரிராஜஸ்தான்3.8229/10/2024
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரிதமிழ்நாடு3.8211/09/2022
புதிய கலை, வணிகம் மற்றும் அறிவியல் கல்லூரி, அகமதுநகர்மகாராட்டிரா3.7929/10/2022
கே. டி. எச். எம். கல்லூரி, நாசிக்மகாராட்டிரா3.7929/10/2024
செயின்ட் ஜோசப் கல்லூரி, பெங்களூர்கருநாடகம்3.7929/10/2024
தூய சவேரியார் கல்லூரி, கொல்கத்தாமேற்கு வங்காளம்3.7722/01/2024
காட்டன் கல்லூரி, கவுகாத்திஅசாம்3.7604/11/2021
தூய வளனார் கல்லூரி, தேவகிரிகேரளம்3.7615/09/2023
திருச்சிலுவைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளிதமிழ்நாடு3.7513/02/2027
தியோகிரி கல்லூரி, அவுரங்காபாத்மகாராட்டிரா3.7516/03/2021
வி. என். ஆர். விக்னனா ஜோதி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்தெலங்காணா3.7315/08/2023
இலயோலா சமூக அறிவியல் கல்லூரிகேரளம்3.7209/12/2021
தூய ஆன்ஸ் கல்வியியல் கல்லூரி, மங்களூருகருநாடகம்3.7109/12/2021
மூடு

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.